பாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சி.. ஸ்ரீரெட்டி மீது போலீசில் நடிகர் புகார்

ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நடிகர் வாராகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Recommended Video

ஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி- வீடியோ

சென்னை: தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நடிகர் வாராகி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

Actor files complaint against Sri reddy

தெலுங்கைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் தன்னை ஏமாற்றியவர்கள் என சிலரின் பெயர்களை அவர் அறிவித்து வருகிறார். தமிழில் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகரும், சமூக ஆர்வலருமான வாராகி இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், 'ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சிக்கிறார். இந்திய கலாச்சாரத்திற்கும், பெண்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்படுகிறார். எனவே, ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor files complaint against Sri reddy

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திக்க ஸ்ரீரெட்டி முடிவு செய்துள்ளார். அதில் முக்கிய தமிழ் சினிமா பிரபலம் யாருடைய பெயரை அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X