கொரோனா.. விளையாடியது போதும்.. வெளியேறு..நாங்கள் வாழ வேண்டும் ..ஜி.மாரிமுத்து கவிதைகள்!

சென்னை : கொரோனா குறித்து தன் கருத்துக்களை கவிதையில் பதிவிடுகிறார் பிரபல நடிகர் ஜி.மாரிமுத்து.

தமிழ் சினிமாவில் நம் மனதிற்கு பிடித்த பல நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை சொல்லாத நாள் இருக்காது. அது போல் நாம் அடிக்கடி பல திரைப்படங்களில் பார்க்கும் முகமாக சிலர் இருப்பார்கள். ஆனால் பெயர் தெரியாது. இந்த மாதிரியான நடிகர்கள் பொதுவாக அப்பா, அண்ணன் அல்லது வில்லனாக நடிப்பார்கள்.

 Actor G. Marimuthu posted a photo on the social media about Corona

அப்படி பலரும் ரசித்து பார்த்து பெயர் அதிகமாக தெரியப்படாத நடிகர்களில் ஒருவர் ஜி.மாரிமுத்து. இவர் இயக்குனராக புலிவால் மற்றும் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

இவர் தமிழில் வாலி திரைப்படத்தில் அறிமுகமாகி பல தமிழ் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் தற்போது லாக்டவுன் காரணத்தால் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் இந்த கொரோனா காலத்தில் வரும் சர்ச்சைகள் மற்றும் நாம் கடைபிடிக்க வேண்டியதை பற்றி தன் கருத்துக்களை பல புகைப்படமாக்கி பதிவிடுகிறார்.

 Actor G. Marimuthu posted a photo on the social media about Corona

அந்த புகைப்படங்களில் அவர் கூறியதாவது: நாம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும், ஊரடங்கால் எப்படியும் வாழ முடிந்த மனிதனுக்குள் நீ எப்படி வாழ முடியும் கொரோனா? விளையாண்டது போதும் வெளியேறு நாங்கள் வாழ வேண்டும் என்று ஒரு அழகான கவிதை நடையில் கிராஃபிக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 Actor G. Marimuthu posted a photo on the social media about Corona

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், உழைப்பவர் உழைத்துக்கொண்டே இருப்போம். படைப்பவர் படைத்துக்கொண்டே இருப்போம், மனிதன் புது உலகை படைப்பான், சாய்ந்த கலப்பையை தூக்கி நிறுத்த விவசாயிகள் இருக்கிறார்கள் போன்ற பல கருத்துக்கள் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்றும் பல விதங்களில் நிரூபித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X