For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நேரத்தில் 2 படம் - அசத்தும் ஜி .வி. பிரகாஷ் - பொறாமையில் ஹீரோக்கள்

|

சென்னை: தமிழ் திரையுலக வரலாற்றில் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்காத வாய்ப்பு வளர்ந்து வரும் இளம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்துள்ளது. இதனால் சக நடிகர்கள் அவரை பார்த்து பொறாமைப்படுகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் முதன் முதலில் ஜென்டில் மேன் படத்தில் வரும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாட்டுக்கு குரல் கொடுத்தார். அது தான் அவர் தமிழ் திரையிலகில் காலடி எடுத்து வைக்க முதல் படியாக இருந்தது.

Actor G.V.Prakash acted two films will be released on same day

பின்னர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெய்யில் படத்திற்கு இசையமைத்து பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். தொடர்ந்து இவர் இசையமைத்த கிரீடம், மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள் என அனைத்தும் வெற்றி பெற்றன. அதிலும் ஆடுகளம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இடையில், படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்ததால், முதன் முதலில் குசேலன் படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். தொடர்ந்து சில படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டி வந்தாலும் கூட, முதன் முதலில் கதாநாயகனாக நடித்தது டார்லிங் படத்தில் தான். இந்தப் படம் அபார வெற்றி பெற்றது.

டார்லிங் படத்திற்கு பின்பு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இடையில் நடிகை ஜோதிகாவுடன் நடித்த நாச்சியார் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றத் தந்தது. இதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Actor G.V.Prakash acted two films will be released on same day

இதனால் இவரின் கைவசம் தற்போது ஆறேழு படங்கள் உள்ளன. இவை அனைத்துமே அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. அதிலும் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு கிடைக்காத வாய்ப்பு தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்துள்ளது. ஆம், இவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் ஒரே நடிகர் நடித்த இருவேறு படங்கள் ஒரே நாளில் வெளியான காலமெல்லாம் உண்டு. தற்போது அந்த காலமெல்லாம் மலையேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தக்காலத்தில் ஒரே நடிகர் நடித்த ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலான நடிகர்கள் ஒரு படத்தை முடித்த பின்பே அடுத்த படத்தை தொடங்குகின்றனர்.

இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டில் தான் கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளி தா, கிழக்கு மலை ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின. பின்னர் பரத் நடிப்பில் வெயில், சென்னை காதல் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின. இதே போல் பிரபுதேவா தமன்னா ஜோடி நடித்த தேவி 2, காமோஷி ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

தற்போது, அதே வழியில் வாட்ச்மேன் படத்திற்கு பிறகு, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கையில் ஐங்கரன், 4ஜி, அடங்காதே, 100% காதல், ஜெயில்,

சிவப்பு மஞ்சள் பச்சை, என கை நிறைய படங்கள் உள்ளன. இதில் பல படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கின்றன.

இதில் 100% காதல் படம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்நிலையில், சித்தார்த்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் புதிய படம் சிவப்பு மஞ்சள் பச்சை, சசி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், காஷ்மிரா பர்தேசி, லிஜ்மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தையும், ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100% காதல் படத்தையும் செப்டம்பர் 6ஆம் தேதியிலேயே வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது சரியாக இருக்குமா என புரியாமல், சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர்.

English summary
GV Prakash, an emerging young actor and composer, has had a chance in the history of Tamil cinema. The fellow actors are jealous of him. His two films will be released on the same day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more