யோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க!
யோகிபாபுவுக்காக பெண் தேடுவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காமெடி நடிகர் யோகிபாபுவுக்காக பெண் பார்த்து வருகிறேன் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பசங்க புரோடக்ஷன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்கா பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஜி.வி.பிரகாஷ், யோகிபாபுவுக்கு பெண் தேடுவதாகக் கூறினார்.

இதுதொடர்பாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இந்த படம் ஒரு முழு நீள காமெடி படம். பொதுவாக சினிமாவில் வரும் ஹீரோக்கள், வேலையில்லாமல் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தின் ஹீரோ ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பான். மீன் விற்க போவான், அது விற்கவில்லை என்றால், மறுநாள் அதை கடுவாடாக்கி விற்பான். இப்படி ஒரு துறுதுறுப்பான கேரக்டர் அது.
ஹீரோவுக்கு பெண் பார்க்கப்போகும் நடக்கும் விஷயங்கள் செம காமெடியாக இருக்கும். படம் ஒரு நல்ல சம்மர் வெகேஷன் ஃபீலை கொடுக்கும்.
படத்தில் எனக்கு பெண் பார்க்க அனைவரும் வருவார்கள். ஆனால் நாங்கள் யோகிபாபுவுக்கு பெண் பார்க்கிறோம்.
படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் தியேட்டருக்கு சென்று பாருங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











