21 நாட்கள் 21 நிமிடங்களாகும்.. மனிதனுக்கு மனிதன் என்ற நிலை வந்துள்ளது.. கஜராஜ்
சென்னை : நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவான கஜராஜ் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் கொரோனாவுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவில் நாம் வீட்டில் இருக்கிறோம். இது அரசு எடுத்திருக்கும் சரியான நடவடிக்கையே இந்த ஊரடங்கை மதித்து நாம் வீட்டின் உள்ளே இருந்தால் தான் கொரோனாவை கட்டுபடுத்த முடியும். 21 நாட்களில் முதல் நாள் முடிந்தது மீதம் 20நாட்களை எளிதில் கடந்து விடலாம், கடந்த பின் இவையனைத்தும் 21நிமிடங்களாக தான் நமக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

கண்ணுக்கு தெரியாத எதிரி தான் கொரோனா அதை கத்தி எடுத்து போய் குத்த எல்லாம் முடியாது. கொரோனாவுக்கு எதிராக அரசு எடுத்திருக்கும் முடிவை மதித்து நாம் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் .
மேலும் கடவுள் சரியான பாடத்தை கொடுத்திருக்கிறார். மனிதனுக்கு மனிதன் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இங்கு பக்கத்து வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் உடனே ஒடி வருகிறார்கள். இனி மனிதம் எல்லாமுமாய் இருக்கும் என்று கூறினார் கஜராஜ்.
இந்த 21 நாட்களை வீட்டினுள் இருந்து சரியான பொழுது போக்குடன் கழியுங்கள். வீட்டில் நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறேன். இதே போல் செய்யுங்கள் 21 நாட்களுக்கு பிறகு இது அனைத்தும் நமக்கு நல்ல ஒரு நினைவாக அமையும் ஏனெனில் இந்த மாதிரியான வாய்ப்பு நமக்கு திரும்பவும் கிடைக்க போறதில்லை என்றும் கூறினார் .

மக்களின் மனநிலை இந்த 21 நாட்களில் கெட்டு விட கூடாது என்று பல பிரபலங்களும் பல நல்ல விஷயங்களை தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் வாயிலாக நடிகர் கஜராஜும் காணொலியை வெளியிட்டு பாசிடிவ்வாக பேசியுள்ளார் .
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பதட்டம் அதிகரித்து கொண்டே போகிறது இதே நேரத்தில் கொரோனா தொற்றும் அதிகரித்து வரும் நிலையில் இதை சமாளிக்க ஒரே வழி நல்ல எண்ணங்கள் தான் என்பதை புரிந்து பலரும் செயலாற்றி வருவது பாராட்டிற்கூறிய விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











