ஈசிஆருக்கு கூட்டிட்டுப்போய்.. என் காதலை இப்படிதான் சொன்னேன்.. மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: தன்னுடைய காதலை வெளிப்படுத்தியது எப்படி என்பது குறித்து பிக்பாஸ் பிரபலமும் பிரபல நடிகருமான கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்துக்கு முந்தைய நாளான இன்றை கிஸ் டேவாக கொண்டாடி வருகின்றனர் காதலர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரும் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவருமான கணேஷ் வெங்கட்ராம் தனது காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பல மொழி படங்கள்

பல மொழி படங்கள்

கணேஷ் வெங்கட்ராம் அபியும் நானும், இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கணவன் மனைவி பேட்டி

கணவன் மனைவி பேட்டி

கணேஷ் கடந்த 2008ஆம் ஆண்டு டிவி தொகுப்பாளர் நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நிஷாவுடனான தனது காதல் அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பேட்டியளித்துள்ளனர்.

புரிந்து கொண்டோம்

புரிந்து கொண்டோம்

அதில் கணேஷ் கூறியிருப்பதாவது, நாங்கள் இருவரும் முதலில் டிவி நிகழ்ச்சியில்தான் சந்தித்தோம். அதன்பிறகு எங்களுக்குள் ஒரு அழகான ஃபிரண்ட்ஷிப் மலர்ந்தது. நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். இருவருக்கும் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டோம்.

என் ஸோல்மெட்

என் ஸோல்மெட்

இருவரும் ஒருவர் மீது ஒருவர் ரொம்பவே அக்கறை கொண்டோம். எங்களுக்குள் ஒரு அழகான பாண்ட் உருவானது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நான் அவரிடம் காதலில் விழ ஆரம்பித்தேன். அவர்தான் என் ஸோல்மெட் என்பதை உணர்ந்தேன்.

ஒன்றாக நேரம் செலவழித்தோம்

ஒன்றாக நேரம் செலவழித்தோம்


டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் ஈசிஆருக்கு அழைத்து போகலாம் என முடிவு செய்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டோம். ஒன்றாக நேரத்தை செலவழித்தோம். நாங்கள் சென்ற வழியில் ஒரு சர்ச் இருந்ததை பார்த்தோம். அந்த சர்ச் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

என் வாழ்க்கை முழுக்க..

என் வாழ்க்கை முழுக்க..

சர்ச்சுக்குள் சென்றோம். அங்கு யாரும் இல்லை. நாங்கள் மண்டியிட்டு பிராத்தித்தோம். அந்த நேரத்தில்தான் அவரிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று தோன்றியது. என் வாழ்க்கை முழுக்க அவருடன்தான் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

என்னவளே அடி என்னவளே..

என்னவளே அடி என்னவளே..

தொடர்ந்து பேசிய நிஷா, கணேஷ் என்னிடம் காதலை சொல்வதற்கு முன்பே எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. நான் காரில் ஏறியதும் என்னவளே அடி என்னவளே பாடலை பிளே பண்ணினார்.

காதலை உணர்ந்தேன்

காதலை உணர்ந்தேன்

பின்னர் நடந்த எல்லா விஷயத்தையும் கவனித்ததில் அவருடைய காதலை உணர்ந்தேன். பின்னர் சர்ச்சில் பிரே பண்ணும் போதும் கடவுளிடம் இவர் சரியானவரா என்று கேட்டேன். சில நிமிடங்கள் கழித்து அவர் என்னிடம் காதலை சொன்னதும் எல்லாம் மேஜிக் போல் இருந்தது. எமோஷனல் ஆகி அழ ஆரம்பித்துவிட்டேன் என்று கூறினார்.

அழுதார்.. காக்க வைத்தார்

அழுதார்.. காக்க வைத்தார்

தொடர்ந்து பேசிய கணேஷ் அவர் அழுததும் நான் திகைத்து விட்டேன். எமோஷனலாகி அழுதுவிட்டார். பின்னர் என்னை காக்க வைத்தார். அதேநேரத்தில் என் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று தான் காதலை வெளிப்படுத்திய விதத்தையும் அதனை நிஷா ஏற்றுக்கொண்டதையும் கூறியுள்ளார் கணேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X