இந்த பிக்பாஸ் நடிகர் சீக்கிரமே ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுடுவார் போலருக்கே…!
நடிகர் கணேஷ் வெங்கட் ராமன், பேங்காக் உணவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னை: பேங்காக்கில் சுற்றிவரும் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேங்காக் உணவுகள் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் அவர் எவ்வளவு ஜெண்டில்மேன் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்.

இவருக்கு தமிழில், கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ஜெயம் ரவியின் தனி ஒருவன் போன்ற படங்கள் நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. கணேஷ் சரியான சாப்பாட்டு பிரியர் என்பது தெரிந்தவிஷம்.
சமீபத்தில் தாய்லாந்து சென்ற பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ் "இதை மிஸ் பண்ணிடாதீங்க" என தாய் உணவான கிரில்டு டைகர் பிரானைக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
கணேஷ் பேங்காக் டைரீஸ் என்று சொல்லுமளவிற்கு மனைவி நிஷாவுடன் ஊர் சுற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் பேங்காக் நகர வீதிகளில் உள்ள உணவகங்களை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விதவிதமான உணவுகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களைப் பார்க்கும்போது சென்னை வந்து விரைவில் ஒரு தாய்லாந்து உணவகம் ஆரம்பிப்பார் எனத் தோன்றுகிறது.
கணேஷ் இப்போது அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என்ற படத்திலும், மைஸ்டோரி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











