தம்பி உயிரிழப்பு.. நாளைக்கே என் அம்மா இறந்துடலாம்.. உடைந்து அழுத கஞ்சா கருப்பு!

சென்னை: நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரரான அறிவழகன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த செய்தியை கேட்டு அவரது தாயாரின் உடல்நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாக கஞ்சா கருப்பு கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன்(45), அதிகாலை நேரத்தில் டீ குடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனம் எது என்று தெரியாததால், போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Ganja Karuppu Death

கஞ்சா கருப்பு: இதுகுறித்து உருக்கமாக பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, அதிகாலை 3 மணிக்கு டீ குடிக்க வெளியே வந்த என் தம்பி மீது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதுவரை அந்த வாகனம் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த செய்தியை கேட்டு என் அம்மா மிகவும் மனமுடைந்து இருக்கிறார்கள். நாளைக்கே கூட என் அம்மா உயிரிழந்துவிடும் அளவுக்கு துயரத்தில் இருக்காங்க. என் அம்மாவின் மனசு சாந்தி அடைவதற்காகவாது இந்த விபத்தை ஏற்படுத்தியது யார் என்று கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X