Vadivelu - வடிவேலு யார் வீட்டுக்கு போனாலும் காசு வாங்குவார்.. கஞ்சா கருப்பு ஷேரிங்ஸ்
சென்னை: Ganja Karupu On Vadivelu (வடிவேலு பற்றி கஞ்சா கருப்பு) வடிவேலு யார் வீட்டுக்கு சென்றாலும் 1500 ரூபாய் பணம் கேட்பார் என கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார்.

இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை. சூழல் இப்படி இருக்க அவரை சுற்றிய பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர். எனவே வடிவேலு தனது ஸ்டைலை மாற்றி தற்கால சினிமாவுக்குள் விரைவில் கலப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னன்: அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் பல பேட்டிகளில் சொன்னபடியே இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னனில் காட்சிப்படுத்தியிருந்தார். வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
தொடர் குற்றச்சாட்டுக்கள்: வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தாலும் அவரை சுற்றி சுமூகமான சூழல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். ஒன்றிரண்டு பேருடன் நின்றுவிடும் என நினைத்தால் அந்தப் பட்டியல் மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டு கொண்டே செல்கிறது.
கஞ்சா கருப்பு: இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பும் வடிவேலு மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "வடிவேலு யாருக்கும் ஒரு உதவியும் செய்யமாட்டார். யாருடைய வீட்டுக்கு அவர் சென்றாலும் வீட்டு வாசலில் நின்று பெட்ரோலுக்கு 1500 ரூபாய் கொடுங்கள் என கேட்பார். அதனால்தான் அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் நானோ பல உதவிகளை செய்திருக்கிறேன். அப்படி இருந்ததால்தான் இப்போது நான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். அவர் நன்றாக இருப்பதற்கு காரணமே யாருக்கும் ஒரு பைசாக்கூட தரமாட்டார் என்பதால்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











