அரைகுறை ஆடை அணிந்த நடிகை கவ்ஹர் கானுக்கு பளார் விட்ட வாலிபர்
மும்பை: மும்பையில் டிவி நிகழ்ச்சிக்காக ஷூட்டிங்கில் இருந்த பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் அரைகுறை ஆடை அணிவதாகக் கூறி பார்வையாளர் ஒருவர் அவரை அறைந்துள்ளார்.
மும்பை பிலிம்சிட்டியில் பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அவர் டிவியில் இசை ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இந்த ஷோவின் இறுதி நிகழ்ச்சியை தான் ஷூட் செய்து கொண்டிருந்தனர். அப்போது பார்வையாளர்களில் ஒருவரான முகமது அகில் மாலிக்(24) என்பவர் மேடையில் ஏறி கவ்ஹர் கானை தொட முயன்றார். அவர் எதிர்க்கவே மாலிக் கானை கன்னத்தில் அறைந்தார். முஸ்லீமாக இருந்து கொண்டு அரை குறை ஆடை அணிந்து சீப்பான பாடல்களுக்கு உங்களால் எப்படி நடனம் ஆட முடிகிறது என்று மாலிக் கவ்ஹர் கானை கேட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடிவந்து மாலிக்கை பிடித்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலிக் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
கவ்ஹர் கான் கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











