என்னை முழு மனிதனாக்கியவர் மஞ்சிமா.. கௌதம் கார்த்திக் மகிழ்ச்சிப் பேட்டி!
சென்னை : நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிறப்பான வெற்றிக்காக இவர் காத்திருக்கிறார்.
தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது இவருக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இந்தக் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

கௌதம் கார்த்திக் -மஞ்சிமா திருமணம்
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கத்தில் உருவான கடல் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். வை ராஜா வை மற்றும் ரங்கூன் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். ஆனால் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுக்க தவறி வரும் கௌதம் கார்த்திக் தற்போது நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்யவுள்ளார்.

பிரபல ரிசார்ட்டில் 28ம் தேதி திருமணம்
இவர்களது திருமணம் வரும் 28ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறவுள்ள இந்தத் திருமணம் எளிமையான முறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறவுள்ளதாக கௌதம் கார்த்திக் அறிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

முதலில் காதலை சொன்ன கௌதம் கார்த்திக்
தேவராட்டம் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், வரும் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமணம் முடிந்தவுடன் செய்தியாளர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். திருமணத்தை தொடர்ந்து ரிஷப்ஷன் இல்லை என்றும் அவர்கள் கூறினர். தேவராட்டம் படத்தின்போது மஞ்சிமா மீது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் தான்தான் முதலில் காதலை சொன்னதாகவும் கௌதம் கார்த்திக் தெரிவித்தார்.

முழு மனிதனாக மாற்றிய மஞ்சிமா
இதையடுத்து தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள மஞ்சிமா இரண்டு தினங்களை எடுத்துக் கொண்டதாகவும் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை முழு மனிதனாக மஞ்சிமா மாற்றியுள்ளதாகவும் தான் மனமுடையும்போதெல்லாம் தனக்கு முழு ஆதரவை அவர் தந்து வருவதாகவும் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். மஞ்சிமா அழகானவர் மட்டுமில்லாமல் மிகவும் வலிமையானவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கௌதம் கார்த்திக்கின் திருமண அறிவிப்பு
பிரபல நடிகர் கார்த்திக் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து பல சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கிற்கும் மணிரத்னம் இயக்கத்தில் முதல் படம் அமைந்தது. இந்தப் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவரால் தொடர்ந்து வெற்றிகளை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை அறிவித்துள்ளார் கௌதம் கார்த்திக்.


Click it and Unblock the Notifications











