திருமணத்திற்கு பிறகு க்யூட் ஜோடி எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்துவந்த நிலையில் கடந்த 28ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமணத்தின் கலர்புல் தருணங்களை புகைப்படங்களாக கவுதம் கார்த்திக் பகிர்ந்து வருகிறார்.

நடிகர் கவுதம் கார்த்திக்

நடிகர் கவுதம் கார்த்திக்

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்தி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் திரையில் அறிமுகமானவர். தொடர்ந்து வை ராஜா வை, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து சிறப்பான பெயரை பெற்றுள்ள போதிலும் சரியான ஹிட் படம் அமையாத நிலையே இவருக்கு காணப்படுகிறது. தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் இவர் நடித்து வருகிறார்.

மஞ்சிமா மோகனுடன் காதல்

மஞ்சிமா மோகனுடன் காதல்

இதனிடையே தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது மலையாள நடிகை மஞ்சிமா மோகனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து தன்னுடைய காதலை மஞ்சிமாவிடம் வெளிப்படுத்தியதாகவும் அவர் சில தினங்கள் யோசித்து பின்பே தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் கவுதம் கார்த்திக், சில ஆண்டுகள் காதலித்த இவர்கள் சமீபத்தில் தங்களது காதலையும் திருமணத்தையும் உறுதிப்படுத்தினர்.

கடந்த 28ம் தேதி திருமணம்

கடந்த 28ம் தேதி திருமணம்

இதனிடையே கடந்த 28ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில திரைத்துறை பிரபலங்கள் சூழ இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் அழகான மலையாள பாரம்பரிய வெள்ளை நிற புடவையில் திருமணத்தின்போது மஞ்சிமா காணப்பட்டார். இதேபோல கவுதம் கார்த்திக்கின் காஸ்ட்யூமும் காணப்பட்டது.

கலர்புல் புகைப்படங்கள் வெளியீடு

கலர்புல் புகைப்படங்கள் வெளியீடு

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கவுதம் கார்த்திக். பல வீடியோக்கள், புகைப்படங்கள் என இவரது பக்கம் களைகட்டும். இதனிடையே தன்னுடைய திருமண புகைப்படங்களால் தற்போது தன்னுடைய பக்கத்தை நிரப்பி வருகிறார். திருமணத்தின் சிறப்பான தருணங்கள், திருமணம் முடிந்து வீட்டிற்குள் நுழையும் தருணம் என கலர்புல்லான புகைப்படங்களை இவர் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு முதல் செல்ஃபி

திருமணத்திற்கு பிறகு முதல் செல்ஃபி

இதனிடையே இந்த க்யூட் தம்பதி திருமணத்திற்கு பிறகு எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் மிகவும் உற்சாகத்துடன் இருவரும் காணப்படுகின்றனர். மிகவும் கலர்புல்லாக ரசிகர்களை கவரும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. தங்களது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ள இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹனிமூன் எப்போ தெரியுமா?

ஹனிமூன் எப்போ தெரியுமா?

தற்போது திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூனுக்கு எங்கே செல்வார்கள் என்ற கேள்வியும் மஞ்சிமாவிடம் முன்னதாக எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மஞ்சிமா, தற்போது பத்து தல படத்தின் சூட்டிங்கில் கவுதம் கார்த்திக் பிசியாகவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தங்களது ஹனிமூனை திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X