திருமணத்திற்கு தயாரான கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..எப்ப கல்யாணம் தெரியுமா?
சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காதல் எப்படி வரும்..ஏன் வரும்.. எப்போது வரும் என்பது தெரியாது ஆனால், வரவேண்டிய நேரத்திற்கு கரெக்ட்டா வரும்னு சொல்வார்கள். அப்படித்தான் கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் காதலில் விழுந்துள்ளனர்.
தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் தீ எக்குதப்பாக பற்றிக்கொண்டதால் காதலிக்கத் தொடங்கினர்.

கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கடல் திரைப்படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், திரைத்துறையில் ஜெயிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

கைவசம் உள்ள படம்
அண்மையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தது. தற்போது கௌதம் கார்த்திக், சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், பத்து தல திரைப்படம் டிசம்பர் 14ந் தேதி வெளியாக உள்ளது.

திருமண தேதி குறிச்சாச்சு
தேவராட்டம் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமாவை காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. காதல் விவகாரம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்த நிலையில் கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, இந்த மாதம் 28ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக ரெடியாக வருகின்றன.

மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையான படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் வெற்றிப்பெற்ற அளவுக்கு படம் சரியாக வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து சத்திரியன், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தார் ஆனால் அந்த படமும் சுமாராக ஓடியது.


Click it and Unblock the Notifications











