கௌதம் கார்த்திக்குக்கு இன்றோடு 31 வயசு… திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பெண்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார் நடிகர் கௌதம் கார்த்திக். பெண்களுக்கு பிடித்தமான நாயகர்களில் இவரும் ஒருவர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "தேவராட்டம்" திரைப்படத்தை தொடர்ந்து இப்போது "மப்டி" என்ற கன்னட திரைப்படத்தில் ரீமேக்கில் சிம்பு உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று கௌதம் தனது 31வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இப்பொழுது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அசாத்தியமான நடிப்புத் திறமை

அசாத்தியமான நடிப்புத் திறமை

பார்த்த உடனே பிடித்துவிடும் அப்படி ஒரு குழந்தைத்தனமான சிரிப்பு நிறைந்த முகம், அசாத்தியமான நடிப்புத் திறமை பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு என அனைத்து சிறப்புகளையும் கொண்ட நடிகர் கௌதம் கார்த்திக் இப்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகப்பிரபலமானவராக உள்ளார்.

காதலர் தினத்திற்கு

காதலர் தினத்திற்கு

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் மற்றும் மூத்த நடிகர் முத்துராமனின் பேரன் என பல்வேறு அடையாளங்களை கொண்டுள்ள கௌதமின் சினிமா அறிமுகத்தை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இவர் 2013ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் காதலர் தினத்திற்கு வெளியான "கடல்" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

என்ட்ரி கொடுத்தார்

என்ட்ரி கொடுத்தார்

கடல் திரைப்படத்திற்கு முன்பாகவே நடிகர் கார்த்தி ஒரு திரைப்படத்தை இயக்க இருந்ததாகவும் அதில் கௌதமை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் அது நடைபெறாமல் போக பின் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அறிமுகப்படுத்தப்பட்டார்

அறிமுகப்படுத்தப்பட்டார்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட கடல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிகை ராதாவின் இளைய மகளான துளசி நாயரும் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தனித்துவமான கதைகளைக்

தனித்துவமான கதைகளைக்

முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகர், சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர் என பல்வேறு பாராட்டுக்களைப் பெற்ற கௌதம் அதன் பின்பு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் உள்ளிட்ட தனித்துவமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து பலரையும் ரசிக்க வைத்து வந்தார்.

அடல்ட் திரைப்படமாக

அடல்ட் திரைப்படமாக

எனினும் இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஹர ஹர மகாதேவிகி மற்றும் இருட்டு அறையில் முரட்டுகுத்து என்ற இரட்டை அர்த்த வசனம் கொண்ட மற்றும் அடல்ட் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் செம கல்லா கட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அப்பா-மகன் கதாபாத்திரத்தில்

அப்பா-மகன் கதாபாத்திரத்தில்

நவரச நாயகன் கார்த்திக் ஏற்கனவே தமிழ் மக்களிடையே தனித்துவமான நடிகர் என்ற பெயர் எடுத்ததை போல அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் அனைவருக்கும் பிடித்த நாயகனாக வலம் வர முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து "சந்திரமௌலி" என்ற திரைப்படத்தில் அப்பா-மகன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தது இவர்களது ரசிகர்களையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

தேவராட்டம்

தேவராட்டம்

காதல் திரைப்படங்களிலும், கலகலப்பான திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த கௌதம் இயக்குனர் முத்தையா உடன் இணைந்து " தேவராட்டம் " என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட லோக்கல் கிராமத்து பையனாக நடித்து அசத்தி இருந்தார்.

31வது பிறந்தநாள்

31வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் தனது தன்னிகரற்ற நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் நடிகர்களில் தனிச் சிறப்பை பெற்று வரும் நடிகர் கௌதம் கார்த்திக் செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இப்பொழுது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X