Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சைக்கிளில் சென்ற பிரபல நடிகரின் காஸ்ட்லி செல்போன் பறிப்பு.. சென்னையில் பரபரப்பு!
சென்னை: பிரபல நடிகரான கவுதம் கார்த்திக்கின் செல்போன் மர்ம நபர்களால் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மகன் கவுதம் கார்த்திக், 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கவுதம் கார்த்திக்
தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

செல்போன் பறிப்பு
இந்நிலையில் இன்று காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கவுதம் கார்த்திக். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

போலீஸில் புகார்
பறிபோன அவரது செல்போன் விலையுயர்ந்தது என தெரிகிறது. தனது செல்போன் பறிபோனது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி
மேலும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். பிரபல நடிகரின் செல்போன் மர்நபர்களால் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.