அண்ணாத்த படத்தில் என் பகுதியை முடித்துவிட்டேன்.. நல்லா வந்துருக்கு.. பிரபல நடிகர் தகவல்!
சென்னை: அண்ணாத்த படத்தில் தனது பகுதியை முடித்து விட்டதாக நடிகர் ஜார்ஜ் மரியான் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜெகபதி பாபு ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஜார்ஜ் மரியான், அண்ணாத்த படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, அண்ணாத்த படத்திற்காக எனது பகுதிகளை முடித்தேன். படம் இப்போது வரை மிகவும் நன்றாக வந்துள்ளது. ரஜினி ஐயா மற்றும் இயக்குனர் சிவா சார் ஆகியோருக்கு நன்றி.. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











