ரஜினியின் காமெடி அவரது பொன்னான நாட்கள் படங்களுக்கு கொண்டு செல்லும்: பிரபல நடிகரின் அண்ணாத்த அப்டேட்!
சென்னை: பிரபல நடிகர் அண்ணாத்த படம் குறித்து அளித்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி, சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக 2020 பிப்ரவரி மாதத்துடன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

கொரோனா
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஓய்வில் இருந்து ரஜினி
நடிகர் ரஜினிகாந்துக்கும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார்.

மீண்டும் படப்பிடிப்பு
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் ஹைதராபாத் புறப்பட்ட தகவல் வெளியானது.

அண்ணாத்த அப்டேட்
மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன், இயக்குநர் சிறுத்தை சிவா பேசும் போட்டோவும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. தற்போது அண்ணாத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஜார்ஜ் மரியான் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் காமெடி
அதாவது அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவின் நகைச்சுவை உங்கள் அனைவரையும் அவரது பொன்னான நாட்கள் படங்களுக்குச் செல்லச் செய்யும் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
ஏற்கனவே அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊர் தலைவராக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் நகைச்சுவையாக நடித்திருப்பதாக நடிகர் ஜார்ஜ் மரியான் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











