நவம்பர் ஸ்டோரி… தனி ஒருவனாக கலக்கிய ஜி.எம்.குமார் !

சென்னை : தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி உள்ளார் ஜி.எம்.குமார்.

Recommended Video

November Story | Poster Pakiri Review | Filmibeat Tamil

அண்மையில் இணையத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதற்கு இவரின் நடிப்பு ஒரு முக்கியமான காரணமாகும்.

நவம்பர் ஸ்டோரியில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்திய ஜி.எம்.குமார் குறித்து சில..

ஜமீன்தார்

ஜமீன்தார்

ஜி.எம்.குமார் என்றதும் பலருக்கு தெரியாது ஆனால், அவன் இவன் திரைப்படத்தில் நடித்த ஜமீன்தார் என்றால். ஓ அவரா என்பார்கள் ஏன் என்றால் அந்த கதாபாத்திரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கதாபாத்திரமாகும். இந்த படம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதை பெற்றுத்தந்தது.

இயக்குனர்

இயக்குனர்

இவர் நடிகர் மட்டுமல்ல , இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர், அறுவடை நாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பாரதிராஜாவின் கேப்டன் மகள் படத்தில் வில்லனாக நடித்தார்.

பல படங்களில்

பல படங்களில்

இதையடுத்து, கேப்டன் மகன், காதல் வைரஸ், ராமச்சந்திரா, தொட்டி ஜெயா, வெயில், மச்சக்காரன், ஆயுதம் செய்வோம், குருவி, தாரை தப்படை என இன்னும் பலப்படங்களில் ஜி.எம்.குமார் நடித்துள்ளார்.

அசத்தலான நடிப்பு

அசத்தலான நடிப்பு

ஜி.எம்.குமார் அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் க்ரைம் எழுத்தாளராகவும், அல்சைமர்ஸ் பாதிப்பால் நினைவுகளை இழக்கும் அப்பாவாக நடித்து கலக்கி இருக்கிறார். ஜி.எம்.குமார். க்ரைம், த்ரில்லிங் கதையில் முக்கியமான கதாபாத்திரமே இவர் தான், இவரை சுற்றியே கதை நகர்கிறது. காட்சிக்கு காட்சி விதவிதமாக பேசி மக்களை கவர்ந்து அசத்தியுள்ளார் ஜி.எம்.குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X