இதுக்குதான் ஊர்ல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்குறது.. கவுண்டமணிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுப்பிரமணி கருப்பையா என்ற இயற்பெயரை கொண்ட கவுண்டமணி 1939ஆம் ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பிறந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தார் கவுண்டமணி.
ஊர் கவுண்டர் என்ற நாடகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் கவுண்டமணி என்று அழைப்படலானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கால்பதித்த அவர் 1960கள் முதல் 2010கள் வரை தமிழ் சினிமாவின் படங்களில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நடிகராக திகழ்ந்தார்.

குணச்சித்திர நடிகர்
இதுவரை 310க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. பெரும்பாலும் செந்திலுடனான இவரது காமெடிகள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிரடியான வசனங்கள்
நகைச்சுவை என்றாலும் கூட இவரது அதிரடியான வசனங்கள் அப்ளாஸை அள்ளின. யாருக்கும் எதற்கும் அஞ்சாமால் தனக்கே உரிய பாணியில் நக்கல் நைய்யாண்டியுடன் டயலாக் டெலிவரி செய்து என்றென்றும் பேசப்படும் ஒரு நகைச்சுவை நடிகர் என்ற பெருமையை பெற்றவர் கவுண்டமணி.

காமெடி கிங்
ஒராண்டில் 10 படங்களுக்கு மேல் நடித்த இந்த காமெடி கிங், வயோதிகம் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தற்போது அதிகப் படங்களில் நடிப்பதில்லை. கடந்த பத்தாண்டுகளில் வெறும் 5 படங்களில்தான் நடித்திருக்கிறார் கவுண்டமணி. கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை என்ற படத்தில் நடித்தார்.

எஸ்வி சேகர் வாழ்த்து
இந்நிலையில் இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நடிகர் கவுண்டமணி. அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கவுண்டரே என்றும் குறையாத லொள்ளும் நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Recommended Video

நீயும் உன் புள்ளையும்..
ஏராளமான ரசிகர்களும் கவுண்டமணியின் நகைச்சுவை வசனங்களை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், உன் புள்ளை படிக்க போயிட்டா யாரு வெட்டியான் வேலை பாக்குறது??
~ஹ்ம்ம் கொஞ்ச நாளைக்கு நீயும் உன் புள்ளையும் பாருங்க என கவுண்டமனி கவுன்டர் கொடுக்கும் டயலாக்கை ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











