காமெடி கிங் கவுண்டமணியின் வயிறு குலுங்க சிரிக்க வைத்த எவர் க்ரீன் காமெடிகள்!

சென்னை: நடிகர் கவுண்டமணியின் எப்போதும் ரசிக்கப்படும் சில எவர் க்ரீன் காமெடிகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

Recommended Video

Ullathai Allitha Movie review | Ullathai Allitha Movie explained

தமிழ் சினிமாவின் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் கவுண்டமணிக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய டைமிங் டயலாக்கால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ராஜாங்கத்தை நடத்தியவர்.

1960களில் இருந்து இருந்து தற்போது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நகைச்சுவைகளின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் குடி கொண்டிருக்கிறார் கவுண்டமணி. இன்று உள்ள பல நகைச்சுவை நடிகர்களுக்கு ரோல் மாடலாக திகழும் கவுண்டமணி இன்று தனது 82வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மன்னன் படம்

மன்னன் படம்

அதனை முன்னிட்டு முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் பட்டைய கிளப்பிய சில எவர் க்ரீன் காமெடி காட்சிகள் குறித்து காண்போம். நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து எஜமான், மன்னன், 16 வயதினிலே, பாபா, உழைப்பாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்த அனைத்து படங்களிலும் சிறப்பான நகைச்சுவையை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக மன்னன் படத்தில் முதலாளியிடம் பாட்டி இறந்துவிட்டதாக கூறி இருவரும் பொய் சொல்லிவிட்டு, தியேட்டரில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கும் தொடர் காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சிங்கார வேலன்..

சிங்கார வேலன்..

இதேபோல் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சிங்கார வேலன் படத்திலும் அவரது நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக கருவாட்டுக் கூடையுடன் வீட்டிற்கு வரும் கமல் ஹாசன் ஒரு மாதம் தங்கப் போவதாக கூறியதும் அவர் கொடுக்கும் கவுன்டர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வைதேகி காத்திருந்தால்

வைதேகி காத்திருந்தால்

அடுத்து விஜய காந்துடன் வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக நடித்த கவுண்டமணி, சைக்கிள் வாடகைக்கு விடுவது, பெட்ரோமாஸ் லைட்டுகளை வாடகைக்கு விடுவது தொழில் செய்து வருவார். இந்தப் படத்தில் தான் பெரும் பிரபலமான செந்தில் கவுண்டமணி காம்பினேஷனில் பட்டைய கிளப்பிய மேண்டில் காமெடி இடம் பெற்றிருந்தது.

சின்னத்தம்பி..

சின்னத்தம்பி..

அடுத்து பிரபுவுடன் இணைந்து நடித்த சின்னத்தம்பி மற்றும் வியட்நாம் வீடு ஆகிய படங்கள் சிறந்த நகைச்சுவைகளை கொண்டிருக்கும் கவுடண்மணியின் படங்களில் சில. இந்தப் படத்தில் பெரிய வீட்டில் சமையல் காரராகவும் மாலைக்கண் நோயாளியாகவும் நடித்திருப்பார் கவுண்டமணி. மாலைக்கண் நோயாளியாக அவர் படும் பாடு ரசிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக தியேட்டரில் சினிமா பார்க்கும் காட்சிகள் மற்றும் கண்களை கட்டிக்கொண்டு டூ வீலர் ஓட்டும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

கரகாட்டக்காரன்..

கரகாட்டக்காரன்..

அடுத்து ராமராஜனுடன் அவர் இணைந்து நடித்த
கரகாட்டக்காரன். இந்தப் படத்தில் ராமராஜனின் கரகாட்ட கோஷ்டியில் தவில் வித்துவானாக நடித்திருப்பார் கவுண்டமணி. அந்தப் படத்தில் விடாமல் நடிகர் செந்திலை விரட்டிக் கொண்டேயிருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி கவுண்டமணியின் லிஸ்டில் இடம்பெற்றுள்ள மெகா காமெடிகளில் ஒன்று.

சூரியன்

சூரியன்

அடுத்து சரத்குமாருடன் அவர் இணைந்து நடித்த சூரியன் படம். சூரியன் படத்தில் அலப்பறை செய்யும் அரசியல் வாதியாக நடித்திருப்பார் கவுண்டமனி. அதில் இடம் பெற்ற போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரமாகுது, அரசியல் இதுல்லாம் சாதாரணம்மப்பா.. சூரியன யாரும் சுட முடியாது.. நம்மளதான் சூரியன் சுடும் ஆகிய டயலாக்குகள் இன்று வரையும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X