மலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் !

சென்னை : தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நம் நினைவில் நிற்பவர் கவுண்டமணி.

நக்கல், நையாண்டி என தனக்கே உரிய ஒரு பாடி லாங்குவேஜ் வைத்துள்ளார்.

இவர் திரையில் வந்து பெரிதாக காமெடி பண்ணணும்னு அவசியம் இல்லை திரையில் வந்து நின்னாலே அதை பார்த்து சிரிப்பதற்கு என்றே இன்றும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சூப்பர் ஸ்டார் தொடங்கி கமல் ,சரத்குமார் , சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நண்பனாக இணைந்து காமெடியில் நடித்திருப்பார் கவுண்டமணி.

காமெடிக்கு பஞ்சமிருக்காது

காமெடிக்கு பஞ்சமிருக்காது

இதுவும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அந்த திரைப்படத்தில் சிரிப்புக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது. வைதேகி காத்திருந்தாள், நம்ம ஊரு பூவாத்தா, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், நாட்டாமை என இன்னும் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

வாழைப்பழ காமெடி

வாழைப்பழ காமெடி

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பனசுந்தரி காமெடி காலங்கள் கடந்தும் சிரிக்க வைத்து வருகிறது. சொப்பனசுந்தரி பெயரில் பாட்டு, காமெடி நிகழ்ச்சி என இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது.அதே போல நாட்டாமை படத்தில் செந்தில் பேசும் 'மை சன்' வசனத்தை அடித்துக்கொள்ளவே முடியாது.

நண்பர்கள்

நண்பர்கள்

திரையில் இவர்கள் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டாலும், நிஜத்தில் இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்களாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் செந்திலுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, மலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்டுகள் குவிந்து வருகின்றன.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

நடிகர் கவுண்டமணி கடைசியாக கணபதி பாலமுருகன் இயக்கத்தில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சௌந்தரராஜா, ரித்விக்கா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X