புடவையை பிடித்து இழுத்தேனா? இதெல்லாம் சாமிக்கே அடுக்காது.. பொய்யான வழக்கு.. கதறும் ஜிபி முத்து!

சென்னை: டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கு பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ஜி.பி முத்து பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுபொய்யான வழக்கு என ஜிபி முத்து பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

உடன்குடியை அடுத்துள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஜிபி முத்து, அதேபகுதியில் வசித்து வரும் முத்து மகேஷ் அவரது மனைவி பால அமுதாவுடன் வசித்து வருகிறார். கடந்த 2ந் தேதி ஜிபி முத்துவின் இரண்டு மகன்களும்,தெருவில் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்த முத்துமகேஷ் எதற்காக இப்படி திரிந்து கொண்டு இருக்கீர்கள் என கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, முத்து மகேஷின் வீட்டிற்கு வந்த ஜிபி முத்துவும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பேசி உள்ளார்.

Gp Muthu case
Photo Credit:

ஜிபிமுத்து மீது வழக்கு: அப்போது ஏற்பட்ட தகராறில் முத்து மகேஷின் மனைவி பால அமுதாவை தாக்கியதாகவும், இதில் அவரின் பற்கள் உடைந்து தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு பால அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குலசேகரபட்டிணம் போலீசார் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில், ஜிபி முத்துவும் அவரது உறவினர்களும் முத்து மகேஷ் மற்றும் அவரது மனைவி பால அமுதாவை தாக்கியது உறுதியானதை அடுத்த ஜிபி முத்து மற்றும் அவரது மனைவி உறவினர்கள் என நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொய்யான வழக்கு: இந்நிலையில், ஜிபி முத்து தனது இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் முத்து மகேஷ் என் குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தபோது மது போதையில் வந்து, இனிமேல் இந்த பக்கம் வந்தால் அவ்வளவு தான், கொன்று விடுவேன் என மிரட்டினார். அதை கேட்பதற்காகத்தான் நானும் என் மனைவியும் அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது அவருடைய மனைவி பால அமுதா அமைதியாக தான் பேசினார். இவர் மீது தான் தவறு என்பது போல தான் அமைதியாக இருந்தார். இதனால், முத்து மகேஷ், எங்கள் கண் முன்னே பாலா அமுதாவை அடித்து பல்லை உடைத்தார். இதை அந்த பகுதியில் இருந்த அனைவரும் பார்த்தார்கள். ஆனால், காவல்நிலையத்தில், நான் பால அமுதாவின் புடவையை பிடித்து இழுத்து, முடியைப்பிடித்து இழுத்து அடித்ததாக புகார் கூறியுள்ளார்.

சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்: எனக்கும் 2 மகன்கள் இருக்கிறார்கள், உனக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் உண்மையிலேயே, உன் புடவையைப் பிடித்து இழுத்து நான் அடித்து இருந்தால் அவர்கள் மீது சத்தியம் செய். நான் ஒரு மாதம் கூட ஜெயிலில் இருக்கிறேன். தனிப்பட்ட பகையை ஊர் பகையாக்கி வேண்டும் என சிலர் என் மீது பொய் வழக்குகளை போட்டு இருக்கிறார்கள். இது குறித்து நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என ஜிபி முத்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்

More from Filmibeat

Read more about: gp muthu case வழக்கு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X