என் தாய்க்கு பிறகு அய்யாவின் இறப்பை ஏத்துக்க முடியல..விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத ஜிபி முத்து!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில்,டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். என் தாய்க்கு பிறகு விஜயகாந்த் அய்யா அவர்களின் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்று கதறி அழுதார்.

தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதையடுத்து அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.இதில் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்

 Actor Gp Muthu go to the vijayakanth memorial and pay your respects

இதையடுத்து சென்னை தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் விஜயகாந்துடன் நடித்த பழம்பெரும் நடிகர்கள் தவிர புதுமுக நடிகர், நடிகையர் பலர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில நாட்களாக சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜிபி முத்து அஞ்சலி: இந்நிலையில், விஜயகாந்தின் ஜிபி முத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார். இன்னைக்கு நான் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். அவர் உயிரிழந்த போது என்னால் வர முடியவில்லை. எங்க ஊரில் நல்ல மழை என்பதால்,வெளியேவர முடியவில்லை. இதனால், இன்று அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். விஜயகாந்த் ஐய்யா உயிரோடு இருக்கும் போது அவரை பார்க்க ரொம்ப ஆசைப்பட்டு வாடகை காரில் அவர் வீட்டு வெளியே வரை சென்றேன். ஆனால்,என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவர் செய்தது போல அனைவரும் முடிந்தவரை உதவி செய்யுங்கள்.பசியோடு இருப்பவர்களுக்கு சாப்பாடு போடுவது ரொம்ப நல்ல விஷயம் அதை அனைவரும் செய்யுங்க.

இவரது இறப்பை ஏற்க முடியல: அதேபோல விஜயகாந்த் நடித்த சின்னத்தம்பி, வானத்தை போல திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவரது இறப்பு செய்தி கேட்டு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என் தாய்க்கு பிறகு அய்யாவின் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியல, நான் சாப்பாட்டு வழியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டதால், தானம், தர்மம் செய்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இவர் 100 வருஷம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் அவரின் உயிரை பரிந்துவிட்டார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X