நடிகர் கின்னஸ் பக்ருவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
கொச்சி : தன்னம்பிக்கை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டுள்ள கின்னஸ் பக்ரு மலையாள திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நிலையில் தமிழிலும் மிகப் பிரபலமாக உள்ளார்.
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள பக்ரு "குட்டியும் கோலும்" என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
இந்திய திரைப்படத்துறையில் மிகக் குறைந்த உயரத்தைக் கொண்ட நடிகர் என்ற தனிச்சிறப்புடன் வலம் வந்து கொண்டிருக்கும் கின்னஸ் பக்ரு ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி மலையாள திரையுலகைச் சார்ந்த பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

காமெடி நடிகராக
நடிப்பதற்கு நடிப்புத் திறமை மட்டும் இருந்தால் போதும் உயரம் தேவையில்லை என்பதை நிரூபித்து இப்பொழுது கின்னஸ் ரெக்கார்டிலும் தனது பெயரை பொறித்துள்ள நடிகர் கின்னஸ் பக்ரு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அறிமுகம்
பலகுரல் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த பக்ரு, 1985 ஆம் ஆண்டு வெளியான "அம்பிலி அம்மாவன்" திரைப்படத்தில் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். மலையாள திரையுலகில் தனித்துவமான நடிகராக அறியப்பட்ட பக்ரு, "அம்பிலி அம்மாவன்" திரைப்படத்தை தொடர்ந்து, ஜோக்கர், மீச மாதவன்,மல்சரம் என பல்வேறு படங்களில் நடித்து வர "அல்புத தீபு" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கின்னஸ் ரெக்கார்டிலும் இடம் பெற்றார்.

குறைந்த உயரம்
உயரம் குறைந்த நடிகர்களைக் கொண்டு உருவாகியிருந்த "அல்புத தீபு" திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தமிழில் "அற்புத தீவு" என மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததற்காக மிகக் குறைந்த உயரம் கொண்ட நடிகர் என்ற வகையில் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்று பல்வேறு பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

அமிதாப்
இயக்குனர் சசி இயக்கத்தில் ஜீவா ஸ்டண்ட் கலைஞராக நடித்து அசத்தி இருந்த "டிஷ்யும்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பக்ரு, தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனித்துவமான காமெடியை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானார். டிஷ்யும் படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கிய பக்ரு, அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான "காவலன்" சூர்யா நடிப்பில் வெளியான "ஏழாம் அறிவு" உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.‘

இயக்குனராக அவதாரம்
இவ்வாறு நடிப்புத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் பக்ரு 2013ஆம் ஆண்டு "குட்டியும் கோலும்" என்ற மலையாள திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும் சென்ற ஆண்டு வெளியான "ஃபேன்ஸி டிரஸ்" என்ற திரைப்படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.

42வது பிறந்தநாள்
இவ்வாறு திரையுலகில் தனது தனித்துவமான திறமையின் மூலம் சிறந்த நடிகராக பல்வேறு மொழிகளில் கலக்கி வரும் கின்னஸ் பக்ரு ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரையுலகைச் சார்ந்த பல திரை பிரபலங்களும் இவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











