அவர் இறந்ததை நம்பவே முடியவில்லை.. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ.. கதறும் பிரபல நடிகர்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பக்கர் மரணமடைந்ததை நம்பவே முடியவில்லை என உருக்கமாக அறிக்கை விட்டுள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்.

Recommended Video

Director Shankar AD Varun Prasath No more | ஐ Assistant Director

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கர் என்கிற அருண் பிரசாத். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விபத்தில் மரணம்

விபத்தில் மரணம்

இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற அருண்பிரசாத், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்பவே முடியவில்லை

நம்பவே முடியவில்லை

இந்நிலையில் 4ஜி படத்தில் நடித்துள்ள ஜிவி பிரகாஷ் அருண்பிரசாத் மரணமடைந்தது குறித்து அதிர்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை.

இப்போது வரை...

இப்போது வரை...

இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை.

மறக்கவே முடியாது

மறக்கவே முடியாது

தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார். '4G' கதையை அவர் என்னிடம் சொல்லும் போது, உடனே ஒப்புக் கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்த கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது.

மூளை பெரியது..

மூளை பெரியது..


வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. சொன்ன கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்து கொடுத்துவிட்டார். '4G' கதைக்களம் பற்றி படம் தயாரானவுடன் சொல்கிறேன். அந்தக் கதையோடு அவர் அந்தளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார்.

மிஸ் பண்ணுவேன் ப்ரோ..

மிஸ் பண்ணுவேன் ப்ரோ..

அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை '4G' படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும் போது வெங்கட் பக்கர் பற்றி இன்னும் நிறையச் சொல்வேன். கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ... கண்ணீருடன் ஜிவி பிரகாஷ்.. என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X