ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படம்.... டிசம்பர் 3ல் வெளியீடு?

சென்னை : இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்குமாரின் பேச்சிலர் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி மற்ற படங்களுக்கும் இவர் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பேச்சிலர் படம்

பேச்சிலர் படம்

இந்நிலையில் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சிலர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், ரிலீசுக்காக காத்திருந்தது. படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருந்தது.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

படத்தின் இசையமைப்பை ஜிவி பிரகாஷ்குமாரே மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் இளைஞர்களுக்கான படம் எறு கூறப்படுகிறது. படத்தின் டைட்டிலும் இதை அறிவுறுத்தும் நிலையில் படத்தின் டீசரும் இதையே கூறுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் படம் அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

குடும்ப படம்

குடும்ப படம்

படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞன் குறித்த கதை இது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்தப் படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது.

டிசம்பர் 3ல் ரிலீஸ்?

டிசம்பர் 3ல் ரிலீஸ்?

ஜிவி பிரகாஷின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் படத்தின் ரிலீஸ் குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் வரும் டிசம்பர் 3ம் தேதி என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளியையொட்டி அண்ணாத்த, எனிமி உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்த மாதம் 25ம் தேதி மாநாடு, பஹீரா படங்கள் ரிலீசாக உள்ளன.

போட்டிகளின்றி களம்

போட்டிகளின்றி களம்

இதையடுத்து டிசம்பர் 3ம் தேதி பேச்சிலர் ரிலீசாக உள்ளது. இதையடுத்து போட்டிகள் எதுவுமின்றி களத்தில் குதித்த பேச்சிலர் படக்குழு முடிவெடுத்துள்ளது தெரிகிறது. கிறிஸ்துமசையொட்டியும் சில படங்கள் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிகக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X