ரிலீசுக்கு தயாராகும் ஜிவியின் அடுத்த படம்... ஜனவரி 26ல் ரிலீஸ்!

சென்னை : ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த மாதத்தில் அடுத்தடுத்து பேச்சுலர், ஜெயில் என இரண்டு படங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்தது.

இந்நிலையில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் படம் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ்

நடிகர் ஜிவி பிரகாஷ், சிறப்பான நடிகராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் இந்த மாதத்தில் பேச்சுலர் மற்றும் ஜெயில் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன. இரு படங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

இசை அசுரன்

இசை அசுரன்

இசை அசுரன் என்று கூறப்படும் ஜிவி பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலும் கவனம் செலுத்தி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அதிகமான ஹிட் பாடல்கள்

அதிகமான ஹிட் பாடல்கள்

தன்னுடைய படங்களுக்கு இசையமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மற்ற படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயில் படத்திலும் தனுஷ் பாடியுள்ள காற்றோடு காற்றானேன் உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

ஐங்கரன் ரிலீஸ் அறிவிப்பு

ஐங்கரன் ரிலீஸ் அறிவிப்பு

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக ஐங்கரன் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி அரசு இயக்கம்

ரவி அரசு இயக்கம்

படத்தை காமன்மேன் பிரசன்ஸ் பி கணேஷ் தயாரித்துள்ளார். ஈட்டி படத்தை இயக்கி கவனம் பெற்ற ரவி அரசு படத்தை இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் வித்தியாசமான ஜிவி பிரகாஷை பார்க்க முடிகிறது.

அடுத்தடுத்த ரிலீஸ்

அடுத்தடுத்த ரிலீஸ்

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜிவியின் பட ரிலீஸ்கள் தள்ளிப் போன நிலையில் தற்போது ஜிவியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளதும் ஐங்கரன் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X