முழு கருத்து சுதந்திரமே மிகச் சிறந்த ஜனநாயகம்- நடிகர் ஜி.வி.பிரகாஷ்
முழு கருத்து சுதந்திரமே மிகச் சிறந்த ஜனநாயகம் என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தில் காட்சிகளை நீக்க கோருவது குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறுகையில் முழு கருத்து சுதந்திரமே மிகச் சிறந்த ஜனநாயகம் என்றார்.
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜகவும் மருத்துவ துறையினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அந்த படத்துக்கு எதிர்ப்பை காட்டிலும் ஆதரவு அலை பெருகிக் கொண்டே வருகிறது. இந்த படம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறுகையில், முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்!
இந்தியா மிக சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன்.மறு தணிக்கை செய்ய தேவையில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











