சூரியனுக்கே தலைவணங்காத பெரிய கோவில்! ட்விட்டரில் சொன்ன ஜீவி.பிரகாஷ்!
நடிகர் ஜீவி.பிரகாஷ் தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஜீவி.பிரகாஷ் தமிழர் பெருமைப்படும் வகையிலான தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் இசையமைப்பாளர் பாடகர் என்று பல வேலைகளில் பிசியாகவே இருக்கிறார் ஜீவி.பிரகாஷ்குமார். அதே நேரத்தில் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து, கதிராமங்கலம், நெடுவாசல், ஸ்டெர்லைட் என எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நடிகர் ஜீ.வி.பிரகாஷ்.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை சொல்லக்கூடிய ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூரியனுக்கும் தலை வணங்காத நம் ராஜகோபுரம், உலகளவில் இதுவரை யாரும் முறியடிக்கமுடியாத படைப்பு என்று அதில் உள்ளது.
அந்த புகைப்படத்தில், லண்டனில் உள்ள பென்ஸ்க்ளாக் டவர், இத்தாலி நாட்டின் பைசா நகர் சாய்ந்த கோபுரம், ஜெர்மனியின் சூர்ஹுசென் டவர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்ற அறிய தகவல்களை பதிவிடுங்கள் என்று கோரிக்கை வைப்பதோடு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா போன்ற முழக்கங்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











