அனிதா வாழ்ந்த இடத்துக்கு சென்றேன்… நடிகர் ஜீவி.பிரகாஷ் உருக்கம்.!
ஜீவி.பிரகாஷ் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்
சென்னை: மாணவி அனிதாவின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் ஜீவி.பிரகாஷ்
நடிகர் ஜீவி பிரகாஷின் அடங்காதே ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அடங்காதே மற்றும் ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம் ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன.

சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துவரும் ஜீவி, மாணவி அனிதா வீட்டிற்குச் சென்றதாக ட்வீட் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரின் மருத்துவ கனவு கலைந்துபோனது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென சட்ட ரீதியாக போராடி வெற்றி கிடைக்காததால் மனமுடைந்த அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகர் ஜீவி பிரகாஷ் அனிதா வாழ்ந்த இடத்திற்கு சென்றதாகவும், அவர் இழப்பின் வலியை உணர்ந்ததாகவும் ட்வீட் செய்துள்ளார். மேலும், இது யாருக்கும் நடந்துவிடக்கூடாது. நீட்டை தடை செய்ய வேண்டுமென அவர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











