ஸ்டார் படத்தை தவறவிட்ட ஹரிஷ் கல்யாண்.. வன்மப்பதிவுக்கு சரியான பதிலடி!

சென்னை: கவின் நடிப்பில் கடந்த வாரம் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ஸ்டார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண், இந்த படத்தை தவறவிட்டது குறித்து இணையத்தில் மோசமான பதிவு வந்து கொண்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து, ஹரிஷ் கல்யாண் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பியார் பிரேமா காதல் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இளனின் இரண்டாவது படம் ஸ்டார் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது. அந்த வகையில் இப்படம் ரிலீசான மூன்றே நாட்களில் ரூ.15 கோடி அள்ளியது. இந்த படத்தில் கலை என்ற கேரக்டரில் நடித்த கவினின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Actor Harish Kalyan angry reply to kavin fans

ஹரிஷ் கல்யாண்: இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடிப்பதற்கு முன், அந்த படத்தில் நடிக்க இருந்தது ஹரிஷ் கல்யாண் தான். அந்த படத்தில் அவர் கமிட்டாகி அதற்காக போட்டோ சூட் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் உள்ளிட்டவை கூட வெளியானது. ஆனால், சில காரணங்களால், அந்த படத்தில் இருந்து திடீரென ஹரிஸ் கல்யாண் விலகி விட்டார். இதைத் தொடர்ந்து தான் அந்த கதை கவினுக்கு சொல்லப்பட்டு, அதில் அவர் கமிட்டாகி நடித்தார்.

சரியான பதிலடி: தற்போது ஸ்டார் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், ஹரிஷ் கல்யாண், ஸ்டார் பட வாய்ப்பை தவறவிட்டு, ஓவர் சீன் போட்டதால், படவாய்ப்பு போச்சா என கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், ஹரிஷ் கல்யாண் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், கால்பந்து டீமில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் கோல் போடும்போது கோல் கம்பியில் பட்டு வெளியில் வந்து விடுகிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கோல் சக்ஸஸ் ஆகி விடுகிறது என்று பதிவிட்டுள்ளார். ஹரிஷ் கல்யாண் குறித்து இணையத்தில் பரவி வரும் கருத்துக்குத்தான் அவர் இப்படி பதிலடி கொடுத்து உள்ளார் என சோஷியல் மீடியாவில் அவரின் ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X