ஹரீஷ் கல்யாணுக்கு தேவதை பிறந்திருக்கு.. தகப்பனான சந்தோஷத்தில் மனுஷன் பகிர்ந்த போஸ்ட்டை பாருங்க!
சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வருவதை விட, சினிமா ரசிகர்களால் காலத்திற்கும் கொண்டாடப்படும் படங்களில் நடிக்க வேண்டும் அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என திரை உலகில் கலக்கி வரும் வெகு சில டேலண்ட்டான நடிகர்களில் ஹரீஸ் கல்யாணும் ஒருவர். இவர் தனது சமூக வ்லைதளப் பக்கத்தில் தனக்கு மகள் பிறந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சியாக அவர் பகிர்ந்துள்ள தகவலில், “ மார்ச் 2ஆம் தேதி நானும் எனது மனைவி நர்மதாவும் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாத்திற்குள் நுழைகிறோம். எங்களுக்கு மகள் பிறந்துள்ளார். தாயும் மகளும் நலமாக இருக்கிறார்கள். ஒரு குடும்பமாக நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் போல உணர்கிறோம். எங்களுக்கு எப்போதும் பக்கத்துணையாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், எங்களுக்கு எப்போதும் நல்லது நினைப்பவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சியான தகவலைப் பகிர்கிறோம். எங்கள் மீது நீங்கள் ஏற்கனவே காட்டி வரும் அன்பும் அக்கறையும் எதிர்காலத்திலும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹரீஷ் கல்யாணுக்கு மகள் பிறந்துள்ள தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், தாய் மற்றும் சேயின் அரோக்யம் குறித்து அன்போடு விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











