கொஞ்சம் குறும்பு.. அதிகமான காதல்.. திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த ஹரீஷ் கல்யாண்!
சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம்பெற்று வருகிறார்.
இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான இவரது ஓ மணப்பெண்ணே சிறப்பான வெற்றியை தந்தது.
இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி ஹரீஷ் கல்யாணிற்கு வீட்டில் பார்க்கப்பட்ட நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது.

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண் சிந்து சமவெளி என்ற படத்தில் தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருந்தார். அந்தப் படத்தில் மிகவும் அப்பாவியாக அனைவரையும் கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த படங்கள் அந்த அளவிற்கு கவனத்தை தரவில்லை. இதனிடையே பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்றார் ஹரீஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியில் ரைசாவுடன் ஹரீசுக்கு ஏற்பட்ட கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

கோலிவுடடில் ஏறுமுகம்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த ஹரீஷுக்கு தொடர்ந்து கோலிவுட்டில் ஏறுமுகம் காணப்பட்டது. யுவன் தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் ரைசாவுடன் இணைந்து நடித்திருந்தார் ஹரீஷ். இந்தப் படம் மிகச்சிறந்த ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் ஹரீஷ். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியா நடித்திருந்த ஓ மணப்பெண்ணே படமும் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

கடந்த மாதத்தில் திருமணம்
இதைத் தொடர்ந்து வீட்டில் பார்த்த நர்மதா என்ற பெண்ணை கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார் ஹரீஷ் கல்யாண். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளஙகளில் வெளியாகி வைரலாகின. முன்னதாக நர்மதாவை ரசிகர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்தார் ஹரீஷ் கல்யாண். இந்நிலையில் இன்றைய தினம் தங்களுடைய திருமணம் முடிந்து ஒரு மாதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹரீஷ்.

கொஞ்சம் குறும்பு & அதிகமான காதல்
கொஞ்சம் குறும்பு & லாட்ஸ் ஆப் லவ் என்றும் முதல் மாத திருமண கொண்டாட்டம் என்றும் ஹரீஸ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்தப் பதிவில் தன்னுடைய மனைவி நர்மதாவுடன் தான் இருக்கும்படியான புகைப்படத்தையும் இணைத்துள்ளார் ஹரீஷ் கல்யாண்.

தொடர்ந்து காதல் படங்கள்
ஹரீஷ் கல்யாணிற்கு அதிகமான அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகமாக உள்ள நிலையில், அவரது திடீர் திருமணம் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனிடையே, திருமணம் ஆனாலும் தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண். பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பிலும் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்தப் படத்திலாவது வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











