twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயக்கம் வேண்டாம்… தடுப்பூசி போடுங்கள்… ஹரீஷ் கல்யாண் அட்வைஸ் !

    |

    சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

    ரஜினிகாந்த், அருண்விஜய், சூரி, சிம்ரன், காஜல் அகர்வால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டர்.

    தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல திரைப்பிரபலங்கள்தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    35,873 பேருக்கு கொரோனா

    35,873 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 5ஆயிரம்து 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.

    448 பேர் உயிரிழப்பு

    448 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் 448 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 20,046 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தடுப்பூசி அச்சம்

    தடுப்பூசி அச்சம்

    கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வதே சிறந்தது என்று பல மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடம் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் , திரைப்பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தடுப்பூசி போடுங்கள்

    தடுப்பூசி போடுங்கள்

    அந்த வகையில், பிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டேன், தயக்கம் வேண்டாம், தடுப்பூசி போடுங்கள்,முக கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா சங்கிலியை உடைக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

    Read more about: harish kalyan
    English summary
    Actor Harish Kalyan gots covid-19 vaccination
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X