Harish Kalyan: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இணைந்த ஹரீஷ் கல்யாண்.. மலரும் நினைவுகள்!
சென்னை: சிந்து சமவெளி என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ஹரீஷ் கல்யாண். தற்போது முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஹரீஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் எல்ஜிஎம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக பார்க்கிங் என்ற படத்தில் நடித்துள்ளார் ஹரீஷ் கல்யாண். இந்தப் படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

நடிகர் ஹரீஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து தமிழில் தன்னுடைய அறிமுகத்தை செய்துக் கொண்டவர் ஹரீஷ் கல்யாண். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னை தற்போது முன்னணி இளம் ஹீரோக்கள் வரிசையில் இணைத்துக் கொண்டுள்ளார். இளம் ரசிகர்களின் கவனத்தை குறிப்பாக ரசிகைகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஹரீஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, பொறியாளன், சந்தமாமா, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர் ஹரீஷ்: முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார் ஹரீஷ். சமீபத்தில் தோனி தயாரிப்பில் இவர் நடித்திருந்த எல்ஜிஎம் படம் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவானா, நதியா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹரீஷ் நடிப்பில் பார்க்கிங் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
பார்க்கிங் படத்திற்கு லோகேஷ் பாராட்டு: வரும் டிசம்பர் 1ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்கள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எளிமையான மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக முதல் விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.
திரில்லர் படம்: சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்த நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்துக் கொண்டு படம் குறித்து பேசியுள்ளார். படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் இந்துஜா, எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஹரீஷ் கல்யாண்: இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி தனக்கு புகழ் வெளிச்சம் கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரீஷ் கலந்துக் கொண்டார். அவருக்கு மேளதாளங்களுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஹவுஸ்மேட்சுடன் இணைந்து ஹரீஷ் நடனமாடியது ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஹரீஷ், இதுவரை வந்த சீசன்களிலேயே இதுதான் மிகவும் கடினமான சீசன் என்று குறிப்பிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தங்க கோரிக்கை: இதுவரை போட்டியாளர்கள் வந்ததே பெரிய விஷயம் என்று கைத்தட்டி பாராட்டிய ஹரீஷ் கல்யாண், போட்டியாளர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று பிக்பாசிடம் கூறினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தான் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார். இதைகேட்ட ஹவுஸ்மேட்ஸ் தங்களது உற்சாகத்தை பதிவு செய்வதாக பிரமோ வெளியாகியுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பல்வேறு விதங்களில் படத்திற்கான ப்ரமோஷன்கள் தற்போது நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











