கோலிவுட்டின் அடுத்தடுத்த மாஸ் திருமணங்கள்... லிஸ்டில் இணைந்த ஹரீஷ் கல்யாண்!
சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஏராளமான பெண் ரசிகைகளை இவர் கொண்டுள்ளார்.
சமீபத்தில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து இவர் நடித்திருந்த ஓ மணப்பெண்ணே படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தற்போது சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு சித்தி இத்னானி ஜோடி சேர்ந்துள்ளார்.

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண் சிறப்பான கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது கதைத்தேர்வுகள் இவருக்கு நல்ல வெற்றிகளை மட்டுமில்லாமல் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்து வருகிறது. குறிப்பாக இவருக்கு ஏராளமான ரசிகைகள் காணப்படுகின்றனர்.

ஓ மணப்பெண்ணே படம்
சமீபத்தில் பிரியா பவானி சங்கருடன் ஹரீஷ் கல்யாண் இணைந்து நடித்திருந்த ஓ மணப்பெண்ணே படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படம் அந்தப் படத்தை பீட் செய்யும் வகையில் சிறப்பான திரைக்கதையுடன் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

நூறு கோடி வானவில் படம்
தற்போது சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹரீஷ். இந்தப் படத்தில் அவருக்கு சித்தி இத்நானி ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் ஹரீஷுக்கு மிகவும் வலுவான கேரக்டராம். இதுதவிர மேலும் 2 படங்களில் கமிட்டாகியுள்ளார் ஹரீஷ். இவரது முந்தைய படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், இந்தப் படங்களும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹரீஷுக்கு திருமணம்
இந்நிலையில் ஹரீஷுக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இவருக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாகவும் மணமகள் தேர்வில் பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் திருமணம்
இவரது திருமணம் வரும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா மற்றும் ஆதி -நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமணம் கோலிவுட்டில் நடந்து முடிந்துள்ளது.

கோலிவுட்டின் அடுத்தடுத்த திருமணங்கள்
இவர்களது திருமணம் கோலிவுட்டின் சிறப்பான திருமணங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் திருமணத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில் அடுத்ததாக ஹரீஷ் கல்யாணின் திருமணமும் அந்த வரிசையில் இணையவுள்ளது.


Click it and Unblock the Notifications











