வெற்றிமாறனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஹரிஷ் கல்யாண்.. என்ன மேட்டரா இருக்கும்?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் 46வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நேரிலேயே சென்று பூங்கொத்து கொடுத்து இயக்குநர் வெற்றிமாறனை வாழ்த்தி உள்ளார்.

தேசிய விருது இயக்குநர்

தேசிய விருது இயக்குநர்

இயக்குநர் வெற்றிமாறன் படம் வருகிறது என்றாலே கூடவே தேசிய விருது பார்சல் பண்ணுங்கப்பா என்கிற வார்த்தைகளும் ஒலிக்கத் தவறுவதே இல்லை. அந்த அளவில் தான் இயக்கும் படங்கள் எல்லாம் தரமானதாகவும், தமிழ் சினிமாவை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கும் உருவாகி வருகின்றன.

பொல்லாதவனில் ஆரம்பம்

பொல்லாதவனில் ஆரம்பம்

2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே பல்சர் பைக்கை எடுத்துக் கொண்டு அதனை சுற்றி ஒரு கேங்ஸ்டர் கதையை அழகாக சொல்லி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

அடுத்து சேவல் சண்டை

அடுத்து சேவல் சண்டை

முதல் படத்தில் பைக்கை கையில் எடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சேவல் சண்டையை கையில் எடுத்து அதனை சுற்றி ஒரு வஞ்சக சூழ்ச்சி கதையை படமாக இயக்கி முதன் முறையாக தேசிய விருது படமாக அதனை மாற்றினார். தனுஷ், டாப்சி நடிப்பில் வெளியான ஆடுகளம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

போலீஸ் அராஜகம்

போலீஸ் அராஜகம்

கைதிகளை போலீசார் எப்படி அடித்து துன்புறுத்துகின்றனர். போலியான என்கவுண்டர்கள் எப்படி நிகழ்கின்றன என்கிற அழுத்தமான கதையை விசாரணை எனும் பெயரில் இயக்கி அடுத்த தேசிய விருதை அள்ளினார் இயக்குநர் வெற்றிமாறன். இந்த படத்தில் தனுசுக்கு பதிலாக தினேஷ் நடித்திருந்தார்.

மீண்டும் தனுஷ் உடன்

மீண்டும் தனுஷ் உடன்

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி விசாரணை படத்தில் டிராப் ஆன நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை படத்திற்கும் தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்திற்கு சர்ச்சைகள் தான் கிளம்பின.

அசுரனில் அசத்தல்

அசுரனில் அசத்தல்

வடசென்னை சர்ச்சை காரணமாக வடசென்னை 2 மற்றும் 3ம் பாகத்தை அப்படியே டிராப் செய்து விட்டு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் தனுஷுடன் இணைந்து உருவாக்கிய அசுரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் தேசிய விருதுகளை வாரிக் குவித்தது.

சூரியை ஹீரோவாக்கி

சூரியை ஹீரோவாக்கி

அசுரன் படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு சற்று ஓய்வு விடப்பட்டு இருக்கிறது. நடிகர் சூரியை ஹீரோவாக்கி விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார். வடசென்னை படத்தில் விஜய்சேதுபதி ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், படத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல்

வாடிவாசல்

சூரி படத்தை முடித்த கையோடு சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் டைட்டிலில் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போகிறார். நடுவில் ஷாருக்கான் மற்றும் விஜய்க்கும் வெற்றிமாறன் கதை சொல்லி உள்ள நிலையில், விரைவில் மேலும் பல பிரம்மாண்ட கூட்டணிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் நேரில் வாழ்த்து

ஹரிஷ் கல்யாண் நேரில் வாழ்த்து

இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில்

வெற்றிமாறன் இயக்கத்தில்

வளர்ந்து வரும் நடிகராக ஹரிஷ் கல்யாண் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இயக்குநர் சிம்புதேவனின் கசடதபற படத்திலும் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது. இந்நிலையில், வெற்றிமாறனை ஹரிஷ் கல்யாண் சந்திந்துள்ள நிலையில், சீக்கிரமே ஹரிஷ் கல்யாண் - வெற்றிமாறன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கா என ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ரெயின் ஆன் பிலிம்ஸ்

ரெயின் ஆன் பிலிம்ஸ்

மேலும், மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குநர்கள் ஒன்று திரண்டு ரெயின் ஆன் பிலிம்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் சமீபத்தில் தொடங்கி உள்ள நிலையில், ஹரிஷ் கல்யாணுக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கோணத்திலும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே ஹரிஷ் கல்யாணின் பொறியாளன் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X