பிச்சுட்டீங்க... மாநாடு படம் பார்த்து பாராட்டி தள்ளிய பிரபல இளம் நடிகர்... லைக்ஸை குவிக்கும் டிவிட்!

சென்னை: சிம்புவின் மாநாடு படத்தை பார்த்த பிரபல இளம் ஹீரோ பாராட்டி தள்ளியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. பெரும் இழுபறிக்கு பின்னர் நேற்று காலை இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

முந்தைய நாள் இரவு வரை படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில் நேற்று சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலை 8 மணிக்கு மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

பாஸிட்டிவ் விமர்சனம்

பாஸிட்டிவ் விமர்சனம்

படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல்வேறு தடைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்த படக்குழுவுக்கும் படம் தொடர்பான விமர்சனம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. முழுக்க முழுக்க பாஸிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் மாநாடு படத்தை பாராட்டி வருகின்றனர்.

எஸ்ஜே சூர்யா நடிப்பு

எஸ்ஜே சூர்யா நடிப்பு

குறிப்பாக எஸ் ஜே சூர்யா மற்றும் சிம்புவின் நடிப்பு அப்ளாஸை அள்ளி வருகிறது. இதேபோல் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

படம் பார்த்த நடிகர்

படம் பார்த்த நடிகர்

இதனால் மாநாடு ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. சிம்புவின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான ஹரீஷ் கல்யாண் மாநாடு படத்தை பார்த்துள்ளார். படம் குறித்த தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிம்பு அண்ணா பிச்சுட்டீங்க

சிம்பு அண்ணா பிச்சுட்டீங்க

அவர் பதிவிட்டிருப்பதாவது, மாநாடு சூப்பர்ப் படம்... ஹேட்ஸ் ஆஃப் வெங்கட் பிரபு புரோ... தலைவர் யுவன் சங்கர் ராஜா வழக்கம் போல் மாஸ்... எஸ் ஜே சூர்யா சார் நீங்க வேற லெவல்... கடைசியாக ஆனால் குறைந்தவர் அல்ல அண்ணன் சிம்பு... பிச்சுட்டீங்க... ரொம்ப சந்தோஷம் அண்ணா.. மொத்த டீம்முக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X