செம ரொமான்டிக் லுக்.. இளம் நடிகரின் வேறலெவல் போட்டோஷூட் !
சென்னை : தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அதிக பெண் ரசிகர்களைக் கொண்டுள்ள இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.
பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு இவரை சுற்றி பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில் இப்பொழுது தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பெண் ரசிகைகள் அதிகம் கொண்டுள்ள ஹரீஷ் கல்யாண் தனது ரசிகைகளுக்காக செம்ம ரொமான்டிக்காக கவர்ச்சி கலந்தவாறு போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு பெண்கள்களை ஏங்க விட்டுள்ளார்.

பெண் ரசிகைகளை
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்து பெண்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டுள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

இளம் கதாநாயகனாக
அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் என இருவருக்கும் அறிமுக திரைப்படமாக அமைந்த "சிந்து சமவெளி" திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்த பொறியாளன், வில் அம்பு, மற்றும் தெலுங்கில் காதலி, ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட திரைப்படங்கள் சுமாரான வெற்றி பெற்று இளம் கதாநாயகனாக பலருக்கும் அறிமுகமானார்.

மிகப்பெரிய திருப்புமுனையாக
2018ஆம் ஆண்டு யுவன்சங்கர்ராஜாவின் சொந்த தயாரிப்பில் உருவான " பியார் பிரேமா காதல்" இவரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு மிகப்பெரிய ரசிகைகளையும் இந்த திரைப்படம் பெற்றுத்தந்தது.

பிக்பாஸுக்கு பின்
இப்போது இருக்கும் தலைமுறை காதல் ஜோடிகளுக்கு ஏற்ற வகையில் உருவான "பியார் பிரேமா காதல் " திரைப்படத்தில் பிக்பாஸுக்கு பின் ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் இணைந்து நடிக்க இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பு கூடியிருந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்த படத்தின் மார்க்கெட் எகிறியது.

சாக்லேட் பாயாக
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் பெண்களின் மனதைக் கவர்ந்த சாக்லேட் பாயாக வலம் வர தொடங்கினார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களில்
பியார் பிரேமா காதல் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான காதல் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண் இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார்.

கவர்ச்சி கலந்த போட்டோஷூட்
இந்நிலையில் தனது பெண் ரசிகைகளுக்காக வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுக்க நினைத்த ஹரீஷ் கல்யாண், இப்பொழுது செம ரொமான்டிக்காக கவர்ச்சி காட்டியவாறு பெண்களை கவரும் வகையில் கவர்ச்சி கலந்த போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு ரசிகைகளை ஏங்க விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications