6 மணிக்கு எல்லாருக்கும் சர்ப்பிரைஸ் இருக்கு... பிறந்தநாளில் ஹரீஷ் கல்யாண் வைத்த ட்விஸ்ட்
சென்னை : இன்றைய தினம் நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Recommended Video
இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இன்று மாலை 6 மணிக்கு அனைவருக்கும் சர்ப்பிரைஸ் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் அடையாளம்
நடிகர் ஹரீஷ் கல்யாண் சிந்து சமவெளி மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் அமலா பாலிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனாலும் தனது வாய்ப்பிற்காக அவர் காத்திருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன் அவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. தொடர்ந்து அவரது காட்டில், கேரியரில் மழைதான்.

ஏராளமான ரசிகர்கள்
தொடர்ந்து பொறியாளன், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை பெற்றுள்ளார். பக்கத்து வீட்டு பையனை போன்ற இவரது தோற்றம் இவருக்கு அதிகமாக கை கொடுத்து வருகிறது.

கொண்டாட்டத்தில் ஹரீஷ்
இந்நிலையில் தற்போது தெலுங்கு படமான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்கில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் புதுமுக இயக்குநர் கார்த்திக் சுந்தரின் ஓ மன பெண்ணே படத்திலும் நடித்து வருகிறார். இதனிடயே இன்றைய தினம் தன்னுடைய 31வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வருகிறார்.

ஹரீஷ் வைத்த ட்விஸ்ட்
இதையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ஹரீஷ், இன்று மாலை 6 மணிக்கு அனைவருக்கும் தன்னுடைய பக்கத்தில் இருந்து ஒரு சர்ப்பிரைஸ் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











