பிரச்சினை எல்லாம் ஓவர்.. அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!
சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வருகிறார். எம்எஸ் பாஸ்கருடன் இணைந்து ஹரிஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பார்க்கிங் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான லப்பர் பந்து படமும் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.
இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷுடன் இணைந்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை ஹரிஷ் கல்யாண் தற்போது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண்: நடிகர் ஹரிஷ் கல்யாண். அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது லப்பர் பந்து படம். கிராமத்து கிரிக்கெட்டை மையமாகக் வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் இரண்டு தனிப்பட்ட நபர்களின் ஈகோவையும் இந்தப்படம் சிறப்பான வகையில் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் நீண்ட காலங்களுக்கு பிறகு அட்டக்கத்தி தினேஷ் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். இதனிடையே முன்னதாக பார்க்கிங் என்ற படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களையும் வசூலையும் கவர்ந்திருந்த ஹரிஷ் கல்யாண் தற்போது மீண்டும் தன்னை சிறப்பான நடிகராக பதிவு செய்துள்ளார்.
நூறு கோடி வானவில் படம்: அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு லப்பர் பந்து படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்த போதிலும் இவரது கதை தேர்வு சிறப்பாக அமைந்து வருவதாக அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது நடிப்பில் 100 கோடி வானவில் படம் நீண்ட நாட்களாக ரிலீசாக தவித்து வருகிறது. இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
பிரச்சினை ஓவர்: இந்நிலையில் தற்போது லப்பர் பந்து படத்திற்காக கொடுத்த பேட்டியில் தன்னுடைய நூறு கோடி வானவில் படம் குறித்து பேசியுள்ளார் ஹரிஷ். இந்த படத்திலிருந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரொமாண்டிக் ஜானரில் நூறு கோடி வானவில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான நிலையில், படம் அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கி தவித்தது. இந்நிலையில் தற்போது அந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதாக ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் பல மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்த நிலையில், நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கி, படம் ரிலீஸ் தள்ளிபோனது. ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங், லப்பர் பந்து படங்கள் அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் வெளியாகியுள்ள நிலையில், இளம் நடிகரான அவருக்கு காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது, மிகப்பெரிய மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். நூறு கோடி வானவில் படம் அவருக்கு 100 கோடி கிளப்பில் இடம்பிடித்து கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











