Parking: பார்க்கிங் செய்யறதுல இவ்ளோ பிரச்சினை இருக்கா.. உண்மையை எடுத்துக்காட்டிய ட்ரெயிலர்!

சென்னை: ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பார்க்கிங்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Actor Harish kalyans Parking movie trailer released and makes everyone interesting

தோனி தயாரிப்பில் சமீபத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் எல்ஜிஎம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் ஹரீஷ் கல்யாண்: நடிகர் ஹரீஷ் கல்யாண் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும்வகையில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தோனி தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ஹரீஷுடன் இவானா, நதியா ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து த்ரில்லர் ஜானரில் பார்க்கிங் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பார்க்கிங் படம்: படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். பலூன் படத்தில் உதவயி இயக்குநராக பணியாற்றிய இவர் பார்க்கிங் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் ஹரீஷுடன் இந்துஜா, எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குறுகிய கால தயாரிப்பு: படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில் படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவையும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக இந்தப் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் பாராட்டு: இந்தப் படம் குறித்த சிறப்பான விமர்சனங்களை கேட்டு வருவதாகவும் சிறப்பான கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் படத்தின் வெற்றிக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பார்க்கிங் படத்தின் ட்ரெயிலர் அனைத்து தரப்பினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்: நல்ல வேலையில் சேரும் ஹரீஷ் கல்யாண், காதல், கல்யாணம் என செட்டில் ஆக, புதிதாக காரும் வாங்குகிறார். அவரது வீட்டில் காரை பார்க் செய்வதில் அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் பிரச்சினை வருவதாக இந்த ட்ரெயிலரில் அமைந்துள்ளது. இதையடுத்து ஹரீஷ் சந்திக்கும் பிரச்சினைகளையும் படம் பேசுவதாக அமைந்துள்ளது. படத்தில் ஹரீஷின் நடிப்பு மிகச்சிறப்பாக அமையும் என்று இந்த ட்ரெயிலர் மூலம் அறியமுடிகிறது. இயல்பான நடிப்பால் எம்எஸ் பாஸ்கரும் இந்த ட்ரெயிலரில் கவர்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X