இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ’கைதி’ வில்லன் ஹரிஷ் உத்தமன்.. மணப்பெண் யார் தெரியுமா?

திருவனந்தபுரம்: நடிகர் ஹரிஷ் உத்தமன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஷ் உத்தமன் மற்றும் அவரது மனைவி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Mudhal nee Mudivum Nee | Harish Kumar | Rehearsal ல பாதி கதை Develop ஆச்சு | Filmibeat Tamil

தனி ஒருவன், தொடரி, பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

கேரளாவை சேர்ந்த ஹரிஷ் உத்தமன் இதற்கு முன்னதாக மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் உத்தமன்

ஹரிஷ் உத்தமன்

தா எனும் தமிழ் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கெளரவம் படத்திலும் அவர் நடித்தார். மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான மும்பை போலீஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பாண்டிய நாடு, பிசாசு, தனி ஒருவன், பாயும் புலி, வில் அம்பு, டோரா, பைரவா, தொடரி மற்றும் கைதி என ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் ஹரிஷ் உத்தமன்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

கேரளாவை சேர்ந்த ஹரிஷ் உத்தமன் சின்னு குருவிலா எனும் மலையாள நடிகையை ஜனவரி 20ம் தேதி எளிமையான முறையில் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்த்தக்கது.

முதல் மனைவி

முதல் மனைவி

கடந்த 2018ம் ஆண்டு மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான அம்ரிதா கல்யாண்பூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹரிஷ் உத்தமன். ஆனால், மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒரே ஆண்டில் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மலையாள நடிகையை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹரிஷ் உத்தமன்.

மணப்பெண் யார்

மணப்பெண் யார்

மலையாள நடிகையும் ஒளிபதிவாளருமான சின்னு குருவிலா என்பவரை "Special Marriage Act" எனும் முறைப்படி ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார் நடிகர் ஹரிஷ் உத்தமன். நார்த் 24 காதம், கசாபா, லுக்கா சுப்பி மற்றும் மாதவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சின்னு குருவிலா என்பது குறிப்பிடத்தக்கது.

மணமக்களுக்கு வாழ்த்து

மணமக்களுக்கு வாழ்த்து

நடிகர் ஹரிஷ் உத்தமன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் பிரபல நடிகராக வலம் வருகிறார். அவரது திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடித்திருந்த ஹரிஷ் உத்தமன் விரைவில் வெளியாகவுள்ள மம்மூட்டியின் பீஷ்ம பர்வம் படத்திலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X