என்னைத்தேடி தமிழ் கண்டிப்பா வருவான்.. வெளியானது கடைசி உலகப்போர் படத்தின் மிரட்டல் கிளிம்ப்ஸ்!

சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர். நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனிடையே, ஆதியின் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது கடைசி உலகப் போர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடித்து தயாரித்தும் உள்ளார். நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது. இதில் போர்க்கள காட்சிகள் காணப்படுகின்றன. உலகத்தரத்தில் சிறப்பான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த கிளிம்ப்ஸ் காணப்படுகிறது.

Actor Hiphop tamizha Aadhi s Kadaisi ulaga por movie s glimpse released

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இசையமைப்பாளராக ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் தோன்றி மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஒரு கட்டத்தில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து அந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினார். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த ஹிப் ஹாப் தமிழா தொடர்ந்து நீண்ட காலம் படங்களில் நடிக்காமல் இசையில் மற்றும் கவனம் செலுத்தி வந்தார்.

கடைசி உலகப்போர் படம்: இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிடி சார் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து அந்தப் படத்தை ரசிகர்களின் கவனத்தைப் பெறவும் செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா தானே எழுதி இயக்கி நடித்துள்ள தன்னுடைய அடுத்த படத்திற்கு கடைசி உலகப் போர் என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்துள்ள நிலையில் தயாரித்தும் உள்ளார். நேற்றைய தினம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மிரட்டலான கிளிம்ப்ஸ்: ஒரே நோக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு நண்பர்கள் கூட்டத்தின் கதை இது என்று கூறப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வெளியாகி உள்ள படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக அமைந்துள்ளது. உலகத்தரத்திலான விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் போர்க்களக் காட்சிகளை அதிகமாக கொண்டு இந்த வீடியே வெளியாகியுள்ளது. வீடியோவில் படத்தில் நாசர், நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்களையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் படத்தின் நாயகி தமிழ் சாகவில்லை என்றும் தனக்காக அவர் மீண்டும் தன்னை தேடி வருவார் என்றும் கூறுவதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது.

ஹிப்ஹாப் ஆதி இயக்கம்: ஆதி நடிப்பில் 8வது படமாக உருவாகியுள்ளது கடைசி உலகப்போர் படம். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்றைய தினம் மிகச்சிறப்பான வகையில் வெளியானது. இதில் முகத்தில் ரத்தம் வழிய, தலைக்குள் போர், வன்முறை, குண்டுவெடிப்பு போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதல் படத்தில் காமெடியை மையமாக கொண்டு கதைக்களத்தை அமைத்திருந்த ஆதி, இந்தப் படத்தில் எந்தமாதிரியான கதைக்களத்தை கையாண்டுள்ளார் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X