Hiphop thamizh :வீரன் படத்தின் மூன்று நாள் கலெக்ஷன்ஸ்.. ரசிகர்களை கவர்ந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி!

சென்னை :நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது வீரன் படம். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

மரகத நாணயம் படத்தை இயக்கி சிறப்பான விமர்சனங்களை பெற்ற ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வீரன்.

ஆதிரா ராஜ், வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

Actor HipHop Thamizh Aadhis Veeran movie crosses 6 crores collections in just 3 days

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் கலெக்ஷன்ஸ் :நடிகர் ஹிப்ஹாப் ஆதிரா ராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட், வினய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் வீரன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வினய் சயின்டிஸ்டாக நடித்துள்ளார். ஆனாலும் ரசிகர்களை கவர அவர் தவறியுள்ளார். அவரது காட்சிகள் படத்தில் அதிகமாக இல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிறுவயதில் ஆதி மீது இடி விழுகிறது. இதையடுத்து அவருக்கு சிங்கப்பூரில் மேல்சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கிருந்து 14 ஆண்டுகள் கழித்து தன்னுடைய ஊருக்கு திரும்பும் அவர், தன்னுடைய கிராமத்தில் கார்ப்பரேட் கும்பலால் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்ததால் தன்னுடைய கிராமமே அழியும் அபாயத்தில் உள்ளதை அறிகிறார். இதையடுத்து அவர்களை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி எப்படி வெற்றியடைகிறது என்பதை வீரன் படம் கூறுகிறது.

கதையின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் காணப்படுகிறது. மரகத நாணயம் என்ற படத்தை ரசிகர்களுக்கு கொடுத்த சரவணன், இந்தப் படத்தில் சொதப்பியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக துறுதுறுவென்ற நடிப்பை வெளிப்படுத்தும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இந்த படத்தில் அது மிஸ்ஸிங். எப்போதும் சோர்வாகவே காணப்படுகிறார். இதனாலும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது.

Actor HipHop Thamizh Aadhis Veeran movie crosses 6 crores collections in just 3 days

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்தப் படம் கடந்த 3 நாட்களில் சிறப்பான வசூலையே பெற்றுள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்த மூன்று நாட்களில் வீரன் படம் 6 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஆதிக்கு தற்போது சிறப்பாகவே கைக்கொடுத்துள்ளது. எப்போதும், ஹீரோயினை சுற்றிக் கொண்டிருந்த அவர் தற்போது தன்னுடைய நடிப்பில் அடுத்தடுத்து மாறுபட்ட படங்கள் வருவதை உறுதி செய்து வருகிறார்.

இந்நிலையில் இனிவரும் அடுத்தடுத்த நாட்களிலும் வீரன் படம் மேலும் வசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவும் கிராமத்து கெட்டப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருந்த அன்பறிவு படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தற்போது வீரன் படமும் அவருக்கு வரவேற்பை கொடுத்துள்ளது. இதையடுத்து கிராமத்து கெட்டப்புகளில் கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்க அவர் மேலும் ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X