'அமிதாப் மாமா' டிவிட்டருக்கே வரலையாம்.. அது ஃபேக் அக்கவுண்டாம்.. பிரபல இயக்குநர் தகவல்!

சென்னை: ஒளிப்பதிவாளரும் பிரபல நடிகருமான இளவரசு பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கு போலியானது என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒளிபதிவாளராக அறிமுகமானவர் இளவரசு. கருத்தம்மா உட்பட 13 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்கு அறிமுகமானார் இளவரசு.

குணச்சித்திர நடிகராக..

குணச்சித்திர நடிகராக..

இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் சப்போர்ட்டிங் ரோலில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராவும் அசத்தி வரும் இளவரசு நகைச்சுவை நடிகராகவும் பட்டைய கிளப்பி வருகிறார்.

அட்டகாசமான நடிப்பு

அட்டகாசமான நடிப்பு

கலகலப்பு படத்தில் அமிதாப் மாமா என்ற கேரக்டரில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதேபோல் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்குமுத்தாக ஆகிய படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இணைவதில் மகிழ்ச்சி

இணைவதில் மகிழ்ச்சி

இந்நிலையில் நடிகர் இளவரசு டிவிட்டரில் இணைந்ததாக நேற்று தகவல் பரவியது. அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து, தான் டிவிட்டருக்கு வந்திருப்பதாகவும், டிவிட்டரில் இணைவதில் மகிழ்ச்சி என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

சேரன் தகவல்

சேரன் தகவல்

இதனை பார்த்த ரசிகர்கள் வெல்கம் அமிதாப் மாமா என மீம்ஸ் வெளியிட்டு வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் அவரது டிவிட்டர் கணக்கு போலியானது என்றும், அவர் டிவிட்டருக்கே வரவில்லை என்றும் பிரபல இயக்குநரும் அவரது நண்பருமான சேரன் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நீக்கவும்

உடனடியாக நீக்கவும்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நண்பரே... நான் திரு இளவரசு அவர்களிடம் விசாரித்ததில் இந்த டுவிட்டர் கணக்கு அவருடையது அல்ல என தெரிவித்தார்.. ஆகவே தயவுகூர்ந்து அவர் அனுமதியின்றி அவர் பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த அக்கவுண்டை உடனடியாக நீக்கவும்.. என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் நன்றி

ரசிகர்கள் நன்றி

இதனை பார்த்த ரசிகர்கள், இளவரசு நடித்த சதுரங்க வேட்டை படத்தில் இடம் பெற்ற செட்டி உஷாராய்ட்டாரு என்ற டயலாக்குடன் மீம்ஸ் வெளியிட்டு போலி கணக்கு தொடங்கியவரை பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த தகவலுக்காக இயக்குநர் சேரனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X