லியோ, ஜெயிலர் வசூல் எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. நடிகர் இளவரசு நச்சுன்னு சொன்ன பதில்!
சென்னை: தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 13க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இளவரசு முதல் மரியாதை படத்தில் போட்டோகிராஃபராகவே முதன் முதலில் நடித்தார்.
அதன்பின்னர் பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் சிரிப்பாகவும், சீரியஸாகவும் நடித்து வரும் இளவரசு விரைவில் வெளியாக உள்ள யோகி பாபு, வித்தார்த் நடித்துள்ள குய்கோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு நடித்துள்ளார்.

குணசித்திர நடிகர்: முதல் மரியாதை, வேதம் புதிது உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இளவரசு பாபநாசம், கலகலப்பு 2, சதுரங்க வேட்டை, என்ஜிகே, கனா, டாக்டர், வாத்தி, விடுதலை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளார்.
35 லட்சமே பெருசா பார்த்தோம்: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் இளவரசு அப்போதெல்லாம் உலகளவில் வசூல் 35 லட்சம் என்றாலே அதை பெரிதாக பார்த்தோம். ஆனால், இன்று நிலைமையே வேற என சமீபத்தில் குய்கோ படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
லியோ, ஜெயிலர் வசூல்: ஆனால், இப்போ எல்லாம் நிலைமையே மாறிடுச்சு, லியோ, ஜெயிலர் உள்ளிட்ட படங்களுக்கு விமர்சனம் சரியில்லாமல் வந்தாலும், படத்தின் வசூல் 500 கோடி, 600 கோடின்னு சொல்றாங்க.. இதெல்லாம் நிஜமா தானா இல்லை வெறும் நம்பரா சொல்றாங்களா? என்றே மலைப்பாக உள்ளது. அப்போதெல்லாம் தியேட்டர்கள் குறைவு, காட்சிகளும் குறைவு. ஆனால், இப்போ 100 நாள் ஓடினால் வரும் வசூலை முதல் நாளிலேயே வசூல் செய்து விடுகின்றனர். இதை காலத்தின் மாற்றமாகத்தான் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நல்ல படங்கள் கஷ்டப்படுது: தியேட்டரில் முன்னணி நடிகர்கள் படங்களை தவிர்த்து குறைவான பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுத்தாலும் ஓட மாட்டேங்குது. ரொம்பவே கஷ்டப்படுது. மலையாளத்தில் நல்ல கதைகளை மக்கள் வரவேற்கின்றனர். அதே போல இங்கேயும் ரசிகர்களின் ரசனை கமர்ஷியலில் இருந்து சற்றே மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











