நடிகர் இளவரசு மகனுக்கு திருமணம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் இளவரசுவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். இணையத்தில் இந்த போட்டோக்கள் டிரெண்டாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர் இளவரசு. பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் பேசியிருப்பார் இளவரசு. அதன் பின்னர் சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

நடிகர் இளவரசு: ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய இளவரசு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், அறை எண் 305ல் கடவுள், லிங்கா, ஜன்னல் ஓரம், தவமாய் தவமிருந்து, என்ஜிகே என பல படங்களில் நடித்திருக்கிறார் இளவரசு. விமல் நடித்த களவானி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருகிறார்.

திருமண வரவேற்பு: தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கும் இளவரசுவுக்கு பரதன் என்கிற மகன் இருக்கிறார். அவரின் திருமணம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் படையெடுத்து வந்து மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

அதே போல நடிகர் சமுத்திரக்கனி, நடிகரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











