Jigarthanda Double X - ஜிகர்தண்டா 2வுக்கு இவ்வளவு வரவேற்பா?.. ஆச்சரியப்பட்டுப்போன நடிகர் இளவரசு
சென்னை: ஜிகர்தண்டா 2 படத்துக்கும் அதில் என்னுடைய கதாபாத்திரத்துக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இளவரசு தெரிவித்திருக்கிறார்.
பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான மேக்கிங், திரைக்கதை மூலம் தன்னை ஒரு சிறந்த டைரக்டர் என அடையாளப்படுத்திக்கொண்டார். அதனையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. மதுரை ரவுடியிசத்தை கதைக்களமாக கொண்டு அதை தன்னுடைய ஸ்டைலில் ப்ரெசண்ட் செய்தது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: இந்த சூழலில் அவர் தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.

ஜப்பான் காலி: படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் ரிலீஸானது. இந்தப் படத்தோடு கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படமும் போட்டியாக களமிறங்கியது. நிச்சயம் இந்த தீபாவளிக்கு ஜப்பான் வெல்லும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. ஆனால் ஸ்வீட் சர்ப்ரைஸாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பந்தயம் அடித்திருக்கிறது.
அனைத்தும் பக்கா: படத்தை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் அதகளம் செய்துவிட்டார். பீரியட் ஜானரில் படத்தை உருவாக்கி அதை தனித்துவமாக ப்ரெசண்ட் செய்திருக்கிறார். திரைக்கதை, மேக்கிங், நடிகர்களின் நடிப்பு என எதிலும் குறை சொல்ல முடியாது. முக்கியமாக பழங்குடி இனத்தை இதில் கனெக்ட் செய்த விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
செம வரவேற்பு: படத்துக்கு விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஜிகர்தண்டா 2வில் கார்மேகம் என்ற கதாபாத்திரத்தை இளவரசு ஏற்றிருந்தார். படத்தில் லாரன்ஸை பார்த்து அவர் ஃபார் மை பாய் என்ற வசனம் பேசும் இடத்தில் பலத்த கைத்தட்டல்கள் எழுந்தனர். தற்போது அதுகுறித்து பேசியிருக்கும் இளவரசு, "கார்மேகம் அல்லீயஸ் சீசரை (லாரன்ஸ்) பார்த்து ஃபார் மை பாய் என்று சொல்லும் வசனம் அவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் உறவை விளக்குகிறது.
கார்த்திக்கிற்கு நன்றி: இந்த வசனத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இவ்வசனத்தை இப்படித்தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் கண்டிஷன் போடவில்லை. என்னுடைய இயல்பிலேயே விட்டுவிட்டார். அதுதான் என்னை போன்ற நடிகர்களுக்கு சுதந்திரம். அதனால் அவருக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஜிகர்தண்டா 2வுக்கும், இந்த வசனத்துக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











