இடியாக இறங்கியுள்ளது.. ஏற்க முடியவில்லை.. எப்படி ஆறுதல் சொல்வது.. நடிகர் இமான் உருக்கம்!

சென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாரின் மறைவை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என நடிகர் இமான் உருக்கமாக கூறியுள்ளார்.

Recommended Video

தமிழகத்தின் பிஸ்னஸ் மேக்னட்.. யார் இந்த வசந்தகுமார்!? | Oneindia Tamil

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனருமான வசந்தகுமார் நேற்று மாலை காலமானார். 70 வயதான வசந்த குமார் கடந்த 11ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்தடுத்த நாட்களில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலி

இறுதியாக அவருக்கு கொரோனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

தலைவர்கள் இரங்கல்

அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியன் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் இமான் அண்ணாச்சி

நடிகர் இமான் அண்ணாச்சி

இதேபோல் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வசந்தகுமாரின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் இமான் அண்ணாச்சியும் வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இடியாக இறங்கியுள்ளது

இடியாக இறங்கியுள்ளது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இமான்,
வசந்தகுமாரின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் அவரது மறைவு இடியாக இறங்கியுள்ளது. அருமையான நண்பர், அவருடன் தங்கி பிரச்சாரம் செய்துள்ளேன்

அவர் புகழ் மறையாது

அவர் புகழ் மறையாது

குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என்றும் உருக்கமாக கூறியுள்ளார். அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X